உங்கள் கணினி சீராக இயங்க வேண்டுமென்றால் உங்களுடைய கணினிக்கு சமச்சீரான தட்பவெப்ப நிலை இருக்க வேண்டும். தாங்கள் கணினியை அதிக நேரம் பயன்படுத்தி வந்தால் உங்களுடைய கணினியில் உள்ள Hardisk, Processor மற்றும் Motherboard கள் விரைவில் வெப்பமாகிவிடும். இதனால் உங்களுடைய கணினியின் ஆயுட்காலமும் வெகுவாக குறைகின்றது. உதாரணமாக 5 வருடம் வரை இயங்கும் தன்மையுள்ள வன்பொருட்கள் 4 ஆண்டுகள் வரையே இயங்கும். இதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.
இந்த வெப்பத்தை குறைக்க நம் கணினியில் Processor/Motherboard Cooling Fan பொருத்தப்பட்டுள்ளது. இருப்பினும் இதில் முழு பயனை நாம் அடைவதில்லை. இந்த Speed Fan என்கிற சிறிய இலவச மென்பொருளைக் கொண்டு உங்களுடைய கணினியின் Temperature ஐ அறிந்துகொள்ளலாம். இதனால் உங்களுடைய கணினி இருக்கும் அறையின் வெப்ப அளவை குறைக்க உதவுகிறது. அது மட்டுமின்றி இந்த மென்பொருள் நேரடியாக உங்களுடைய கணினியை கையாளும் திறன் உள்ளதால் உங்களுடைய கணினியை இது கண்காணித்து உங்களுக்கு தெரிவிக்கிறது. பல மணி நேரம் கணினியை பயன்படுத்துபவர்களுக்கு தேவையான ஒரு அவசிய மென்பொருள் ஆகும்.
இயங்குதளம்: Win 9x/ME/NT/2K / எக்ஸ்பி / 2K3 / விஸ்டா / 7
Size:2.04MB |