கிட்டத்தட்ட ஒரு புதிய நடிகர் எப்படியெல்லாம் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள பெரும் முயற்சிகள் எடுப்பாரோ... அதற்கு இணையாக உழைக்கிறார் அஜீத். விஷ்ணுவர்தன் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், ஏஎம் ரத்னம் தயாரிக்கும் அடுத்த படத்துக்காக மாலை 8 மணி முதல் அடுத்த நாள் காலை 8 மணி வரை நான் ஸ்டாப்பாக ஒரு சண்டைக் காட்சியில் நடித்து அனைவரையும் அசத்தியுள்ளார் மனிதர்.
அதுவும் சாதாரணமாக அல்ல.. தலைகீழாக தொங்கியபடி போட வேண்டிய சண்டை அது. கரணம் தப்பினால் மரணம்... ஏகப்பட்ட அறுவைச் சிகிச்சைகள் செய்துள்ள அஜீத்துக்கு இந்த ரிஸ்க் வேண்டாம் என இயக்குநர் விஷ்ணுவர்தன் எவ்வளவோ கூறியும், 'டூப் மட்டும் வேண்டாம்... நானே பார்த்துக் கொள்கிறேன்' என்று கூறி தலைகீழாகத் தொங்கியுள்ளார்.
நடு நடுவே சின்ன கேப் விட்டதோடு சரியாம். இரவு முழுக்க தூங்காமல் இந்த சண்டைக் காட்சியில் நடித்துக் கொடுத்துள்ளார்.
தான் நடித்த காட்சிகளை காலையில் போட்டுப் பார்த்து ரொம்பவே சந்தோஷப்பட்ட அஜீத்... "கஷ்டப்பட்டாதான் இந்த சந்தோஷம் கிடைக்கும்," என்றாராம்!