ஹீரோக்களை போல காமெடி நடிகர்களுக்கும் ரசிகர்களால் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. வடிவேலுக்கு வைகை புயல் என்று பட்டம் இருக்கிறது. வடிவேலுவை தொடர்ந்து தற்போது காமெடியில் கோடிகளை குவித்து வரும் சந்தானத்திற்கு இதுவரை பட்டம் எதுவும் வழங்கப்படவில்லை. அந்த குறை இனி நீங்கப்போகிறது. தற்போது சந்தானம் ஆர்யாவுடன் நடித்து வரும் படம் சேட்டை. இந்தி டெல்லி பெல்லியின் ரீமேக்.
கண்ணன் இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் டைட்டில் கார்டிலும், விளம்பரங்களிலும் சந்தானத்தை காமெடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் குறிப்பிடப் போகிறார்கள். இதற்கு சந்தானமும் ஒப்புதல் கொடுத்து விட்டாராம். சந்தானம் சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் இதுபற்றி சொல்லி அவரது அனுமதியை கேட்டதாகவும், இதைக்கேட்டு கலகலவென சிரித்த ரஜினி. "என்னப்பா சூப்பர் ஸ்டார் பட்டத்தை எனக்கு பட்டாபோட்டா கொடுத்திருக்காங்க. யார் வேணாலும் வச்சிக்கலாம்" என்று சொல்லி திரும்பவும் சிரித்தாராம். தலைவரு ஓகே சொல்றாரா கிண்டல் செய்றாரான்னு தெரியமாலே போச்சுதாம் சந்தானத்துக்கு.