ஹன்சிகாவுக்கு அதிர்ச்சி கொடுத்த நயன்தாரா!

ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் வெற்றிக்குப்பிறகுதான் ஹன்சிகாவின் மார்க்கெட் சூடுபிடித்தது. அதைத் தொடர்ந்து அனுஷ்கா, அஞ்சலிக்கு செல்லவிருந்த சில படங்கள்கூட ஹன்சிகா பக்கம் திரும்பின. இதனால் தற்போது அரை டஜனுக்கும் மேலான படங்களில் பிசியாக நடித்து வருகிறார் ஹன்சிகா. அதோடு இன்னும் சில ஆண்டுகளுக்கு தன்னை ஓரங்கட்ட எந்த நடிகையும் வர சான்ஸ் இல்லை என்றும் மிதப்பில் இருந்தார்.
இந்த நிலையில், ஹன்சிகாவுக்கு எதிர்பாராத பெரும் அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் நயன்தாரா. விஷ்ணுவர்தன் இயக்கும் படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக நடித்து வரும் அவர், அடுத்தபடியாக ஆர்யாவுக்கு ஜோடியாக ராஜா ராணி படத்தில் நடிக்கிறார். ஆனால் இந்த படத்தில் நடிப்பதற்கு முதலில் ஹன்சிகாவிடம்தான் பேசியிருக்கிறார்கள். கால்சீட் கொடுப்பதற்கு ஹன்சிகா தயாராகிக்கொண்டிருந்த நேரத்தில் திடீரென்று ஆர்யாவின் அதிரடி சிபாரிசினால் அப்படத்தை கைப்பற்றியிருக்கிறார் நயன்தாரா. இதைத் தொடர்ந்து ஹன்சிகாவுக்காக மாதக்கணக்கில் காத்திருந்த மேலும் சில படங்களும் இப்போது நயன்தாரா பக்கம் திரும்பி நிற்கின்றன. இதனால் கைவசம் இருக்கும் படங்களோடு தன்னை டெபாசிட் இழக்க செய்து விடுவாரோ நயன்தாரா என்று கலங்கிப்போய் இருக்கிறார் ஹன்சிகா. 

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget