ராகவா லாரன்ஸ் இயக்கிய முனி படத்தில் அவருக்கு ஜோடியாக வேதிகாக நடித்தார். முனி-2 வில். அதாங்க காஞ்சனாவில் லட்சுமிராய் ஜோடியாக நடித்தார். காஞ்சனாவின் பெரிய வெற்றிக்கு பிறகு இப்போது முனி-3 தயாரித்து, இயக்கும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறார் ராகவா. இதிலும் லட்சுமிராய்தான் ஹீரோயின் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. காரணம் அந்த அளவுக்கு இருவரும் நெருக்கமாக இருந்தார்கள். ஆனால் இப்போது முனி-3க்கு டாப்ஸி ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று
மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாராகும் இந்தப் படத்தின் கதையும் காஞ்சனா பாணியில்தான் என்கிறார்கள். முனியில் ஆவியாக ராஜ்கிரண் நடித்தார், காஞ்சனாவில் சரத்குமார் நடித்தார். முனி-3யில் மூன்று மொழிகளிலும் ஜோடி ராகவாவும் டாப்ஸியும்தான். முனி மட்டும் மொழிக்கு ஒருவர் நடிக்கிறார்கள். தமிழ் முனியாக பிரபு நடிக்கலாம் என்று கூறப்படுகிறது. ஜனவரி மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது.
விட்டா முனி-10 வரைக்கும் போகும்போலிருக்கே...