5. பீட்சா
சென்ற வார இறுதியில் 41.9 ஆயிரங்களையும், வார நாட்களில் 66.5 ஆயிரங்களையும் வசூலித்து பீட்சா ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. இதுவரை சென்னையில் இதன் வசூல் 4.2 கோடிகள்.
4. போடா போடி
சென்ற வார இறுதியில் போடா போடியின் வசூல் 4.2 லட்சங்கள். வார நாட்களில் 7.4 லட்சங்கள். இதுவரை சென்னையில் போடா
போடி 2.2 கோடிகளை வசூலித்துள்ளது.
3. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்
சென்ற வாரம் வெளியான இப்படம் முதல் மூன்று தினங்களில் 13.7 லட்சங்களை வசூலித்துள்ளது. படம் நன்றாக இருப்பதாக விமர்சனங்கள் பாராட்டுவதால் அடுத்தடுத்த தினங்களில் படம் பிக்கப்பாக வாய்ப்புள்ளது.
2. நீர்ப்பறவை
சென்ற வாரம் வெளியான நீர்ப்பறவை முதல் மூன்று நாட்களில் 43 லட்சங்களை வசூலித்து இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
1. துப்பாக்கி
சென்ற வார இறுதியில் 94.6 லட்சங்களையும், வார நாட்களில் 99.5 லட்சங்களையும் வசூலித்து முதல் இடத்தை துப்பாக்கி தக்க வைத்துக் கொண்டுள்ளது. இதுவரை இதன் சென்னை வசூல் 11.4 கோடிகள்.