விக்ரம் நடிப்பில் டேவிட் படத்தின் கதை - சிம்பிள். இந்தியாவின் இருவேறு பகுதிகளில் வசிக்கும் இரண்டு டேவிட்களை மையமாகக் கொண்டது இந்தக் கதை. இந்த இருவரும் எடுத்து வைக்கும் ஒரு அடி அவர்களின் வாழ்க்கையை மாற்றிப் போடுகிறது. தமிழ் இந்தி இரு மொழிகளிலும் விக்ரம் நடித்திருக்கிறார். கோவாவில் மீனவக் குடும்பத்தில் பிறந்த 35 வயது இளைஞனாக விக்ரம் நடித்துள்ளார். இரண்டு மொழிகளிலும் இமே கேரக்டரில் வருகிறார்.
ஜீவா மும்பையில் பிறந்த கிறிஸ்தவர், இசைக் கலைஞன். இந்தியில் ஜீவாவின் வேடத்தில் நீல் நிதின் முகேஷ் நடித்துள்ளார். இந்த இரு வெள்வேறு நிலப்பரப்பைச் சார்ந்த, வெள்வேறு குடும்பப் பின்னணியை, தொழிலை உடைய இவர்களின் வாழ்க்கையை பின்னிப் பிணைந்து சொல்கிறது படம்.
விக்ரம், ஜீவாவுடன் நாசர், லாரா தத்தா, தபு, இஷா ஷெர்வானி நடித்திருக்கும் இந்தப் படம் அடுத்த வருடம் பிப்ரவரியில் திரைக்கு வருகிறது.