குளிர் காலத்தில் நிலவும் வெப்பநிலை எந்த வகையான சருமத்திற்கும் உகந்ததாக இருக்காது. இது சரும வறட்சி,சுருக்கங்கள்,பொலிவற்ற தோற்றம் போன்றவற்றிற்கு வழிவகுக்கும். குளிர் காலத்தில் ஏற்படும் இவ்வகையான சரும குறைபாடுகளை எதிர்கொண்டு உங்கள் சருமத்தின் அழகை உலகிற்கு காண்பிக்க இந்த எளிய வழிகளை முயற்சித்து பாருங்கள்.
எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு
1. குளிர் காலத்தில் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியதும் முட்டையின் வெள்ளை கருவை நன்றாக அடித்து மாஸ்க் போல முகத்தில் தடவி 30 நிமிடங்கள் கழித்து கழுவினால் முகத்தில் இருக்கும் சோர்வு மறைந்து பட்டு போல் பிரகாசிக்கும்.
2. ஓட்ஸ், முட்டையின் மஞ்சள் கரு மற்றும் தேனை ஒன்றாக கலந்து இந்த கலவையை முகத்தில் தேய்த்து 20 நிமிடங்கள் கழித்து கழும்போது உங்கள் சருமம் புத்துணர்ச்சி பெற்று பொன்போல மிளிரும்.
வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு
1.வாழைப்பழத்தை மசித்து அதனோடு பால் ஆடை மற்றும் தேன் கலந்து இந்த கலவையை முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து கழுவவும்.
2.பப்பாளி பழத்தை மசித்து, முட்டையின் வெள்ளை கரு மற்றும் தயிரோடு சேர்த்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து கழுவினால் முகம் சுருக்கங்களற்ற மிருதுவான சருமம் உங்கள் வசம்.