தாங்கள் மொபைல் போனில் இணையம் உபயோகிப்பவராக இருந்தால் ஸ்கைபயர் உலாவி நிச்சம் உங்களை கவரும். ஸ்கைபயர் (Skyfire) உலாவியில் கணினியில் இணைய தளங்கள் தெரிவது போன்றே மொபைலிலும் இணையதளங்கள் தெளிவாக தெரிகின்றன. யூடியுப் போன்ற வீடியோ தளங்களில் வீடியோக்களை உலாவியின் உள்ளேயே இயக்குகிறது. ஸ்கைபயரின் மேம்படுத்தப்பட்ட புதிய பதிப்பு சிம்பியன் இணையங்குதளத்தை உபயோகிக்கும் மொபைல் போன்களுக்காக வெளியாகி உள்ளது.
இது தொடுதிரை (Touch Screen) மொபைல்களையும் ஆதரிக்கும். இந்த ஸ்கைபெயரில் சிறப்பம்சம் என்னவெனில் தமிழ் இணைய தளங்களையும் தெளிவாக காட்டுகிறது.