நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த வருடம், ஒவ்வொரு ராசிக்கும், நடந்து கொண்டிருக்கும் கிரக சஞ்சாரங்களைப் பொறுத்து பலன்கள் சொல்லப்படிருக்கின்றன. சனி பகவான் ஆண்டு முழுவதும் துலா ராசியில் சஞ்சரிக்கிறார். மேலும் அவர், 18.2.1013 முதல், 6.7.2013 வரை வக்கிரம் அடைகிறார்.
சனி பகவான் துலா ராசியில் உச்ச நிலையில் சஞ்சாரம் செய்வதால், அவரால் கெடு பலன்கள் அதிகம் நிகழ வாய்ப்பில்லை. குரு பகவான் ஆண்டின் தொடக்கத்தில் ரிஷப ராசியிலும் 27.5.2013 முதல் மிதுன ராசியிலும் சஞ்சரிக்கிறார்கள். குரு ஆண்டின் தொடக்கம் முதல் 30.1.2013 வரையிலும், ஆண்டின் இறுதியில் நவம்பர் மாதம் 8-ம் தேதி முதல், ஆண்டின் இறுதி வரையிலும் வக்கிர சஞ்சாரம் செய்கிறார். வக்கிர சஞ்சாரத்தின்போது, கிரகங்கள் தரும் கெடு பலன்கள் உங்களை ஒன்றும் செய்யாது. மாறாக நன்மை பயக்கும். சனி, குருவைத் தவிர ராகு, கேது எனும் சர்ப்பக் கிரகங்கள் முறையே துலா ராசியிலும் மேஷ ராசியிலும் சஞ்சரிக்கிறார்கள்.
கெடு பலன்கள் சொல்லப் பட்டிருக்கும் ராசிக் குரியவர்கள் பெரிதாக கவலை கொள்ளத் தேவையில்லை. ஏனென்றால் அவரவர் ஜாதக அமைப்பின்படியுள்ள திசா-புத்திப் பலன்களைப் பொறுத்தே பலன்கள் அமையும். மேலும், திசா-புக்தி மிகவும் பலமாக அமைந்திருந்தால், கோச்சார பலன்களின் கெடு பலன்கள் அவ்வளவாக எதுவும் செய்யாது. மேலும் ஒவ்வொரு ராசிக்கும் பரிகாரங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. அவற்றை முறையாகப் பின்பற்றி செய்து வந்தால், எந்த தீங்கும் அண்டாது.
வாழ்க வளமுடன்!. இந்தப் புத்தாண்டு இனிய ஆண்டாக மலரட்டும். !
மீனம், கும்பம், மகரம், தனுசு, விருச்சிகம், துலாம், கன்னி, சிம்மம், கடகம், மிதுனம், ரிஷபம், மேஷம்,
பலன் படிக்க அந்தந்த ராசியின் மீது க்ளிக் செய்யுங்கள் !