Wondershare Disk Manager - வன்தட்டு மேலாண்மை மென்பொருள்

கணினியில் தகவல்களை சேமிக்கவும், மென்பொருளை நிறுவி பயன்படுத்தவும் உதவுவது வன்தட்டாகும், இந்த வன்தட்டானது இயங்கு தளம் நிறுவும் முன் ஒரே பகுதியாக இருக்கும். இயங்கு தளம் நிறுவும் போது தான் இதனை நாம் தனித் தனி பகுதியாக பிரிப்போம். ஒரு சில நேரங்களில் வன்தட்டினை தனியொரு பகுதியாக பிரிகாமல் ஒரே பகுதியாக வைத்து விடுவோம். இதன் பின்பு தான் நமக்கு பல்வேறு பிரச்சினைகள் எழக்கூடும். நாம் அனைத்து தகவல்களையும் ஒரே பகுதியில்
தான் சேமிக்க வேண்டும். நம்முடைய கணினியில் மற்றொரு இயங்கு தளம் நிறுவ வேண்டு மென்றாலும் பிரச்சினை அப்போது தான் விரிவடையும். இதுபோன்ற பிரச்சினைகளை சமாளிக்க வேண்டுமெனில் நம் கணினியினுடைய வன்தட்டினை பகுதிகளாக பிரிக்க வேண்டும். இதனை இயங்கு தளம் உதவியுடனே செய்ய முடியும். Disk Management என்னும் வசதியை பயன்படுத்தி விண்டோசில் வன்தட்டினை இயங்கு தளம் நிறுவிய பின்னரும் செய்ய முடியும். ஆனால் ஒரு சில வசதிகளை முழுமையாக பெற முடியாது. ஆனால் Wondershare Disk Manager என்னும் மென்பொருள் மூலமாக அனைத்து வசதிகளையும் பெற முடியும். தற்போது இந்த மென்பொருளானது இலவசமாக கிடைகிறது.

இயங்குதளம்: விண்டோஸ் XP / விஸ்டா / 7
Size:5.91MB
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget