DABANGG 2 சினிமா விமர்சனம்


மாஸ் ஹீரோக்கள் நடிச்சா கதை தேவையில்லை மசாலாவே போதும் என்பதை நிரூபித்திருக்கிறது இந்த படம். தபாங் ஏற்கனவே சல்மான்கான் நடிப்பில் வெளியாகி வசூலில் பட்டய கிளப்பிய படம். அந்தப் படத்தின் வெற்றியைப் பார்த்து பிரமித்துப் போன கோலிவுட்டின் இயக்குநர் தரணி சிம்புவை வைத்து அதே படத்தை ஒஸ்தி என்ற பெயரில் ரீமேக்கினார். காட்சிக்கு காட்சி தபாங்கையே பிரதிபலித்த ஒஸ்தி வந்ததும் தெரியலை. போனதும் தெரியலை. இது கோலிவுட்டின் கதையாக இருக்கிறது.
சரி தபாங் 2 கதை என்ன என்பதைப் பார்ப்போம்.

சல்மான்கான் போலீஸ் அதிகாரி. பணம் கேட்டு குழந்தையைக் கடத்துகிற கும்பலை அடித்து துவைத்து குழந்தையை மீட்க கொண்டு வந்த பணத்தை வாங்கிக் கொண்டு போகிற அகாயசூர காவல்துறை அதிகாரி. இவருக்கும் வில்லன் பிரகாஷ்ராஜ்க்கும் ஒருகட்டத்தில் மோதல் உருவாக, மோதலில் யார் ஜெயிக்கிறார்கள் எனபது தப்பபபாபபாங்ங்… க்ளைமேக்ஸ்.

ஸ்டைலாக நடை போட்டு வருகிறார் சல்மான்கான். அவரை திரையில் பார்த்ததுமே விசில் பறக்கிறது. அவ்வப்போது இவர் காமெடி பண்ண, ஆக்க்ஷனில் தூள்கிளப்ப, அது ரசிகர்களுக்கு கொண்டாட்டமாகிப் போய்விட ரசிகர்கள் ஓ போடுகிறார்கள். இப்படி காட்சிக்கு காட்சி ஓ வாங்குகிறார் சல்மான்கான். கல்யாண வீட்டில் நுழைந்து கல்யாணத்தை நிறுத்தி மணப்பெண்ணை வலுக்கட்டயமாக வில்லன் இழுத்துச் செல்லும் காட்சியில் சல்மான் என்ட்ரி கொடுத்துவிட அந்த காட்சி ரசிகர்களுக்கு கொண்டாட்டமான காட்சியாக அமைந்துவிடுகிறது. ரொமான்ஸ் காட்சிகளிலும் தூள்கிளப்புகிறார் சல்மான்.

ஹீரோயின் பார்ப்பதற்கு ஆன்டி மாதிரி இருக்கிறார். சல்மானுக்கு ஏற்ற ஜோடிதான். அம்மணி போட்டிருக்கிற ஜாக்கெட் முழுவதும் அவரது முதுகுதான் தெரிகிறது.

வில்லனாக வருகிறார் பிரகாஷ்ராஜ். அவரது கெட்டப்புக்கும் வில்லன் கேரக்டருக்கும் சம்பந்தமே இல்லாதது போல் இருக்கிறது. ஆனாலும் தனக்கு கொடுத்த கேரக்டரை கலக்கலாக செய்திருக்கிறார் பிரகாஷ்ராஜ்.

கரீனாகபூர் ஒரு பாடலுக்கு வந்து கெட்ட ஆட்டம் போடுகிறார். இந்தப் பாடலுக்கு வயசுப் பசங்க யாரும் சீட்டுல உட்காரமாட்டேங்குறாங்க. எந்திரிச்சு நின்னு குத்தாட்டம் போடுறாங்க. இந்தப் பாடலுக்கு எழுந்து நின்று ஆட்டம் போட்ட சில வயசானவங்களையும் யூத் பட்டியல்ல நிச்சயம் சேர்த்துக்கலாம்.

இந்தப் பாடல் தவிர இன்னும் ஒரு பாடல் கேட்பதற்கு நன்றாக இருக்கிறது. ஹீரோவும் ஹீரோயினும் பைக்கில் போகும் பாடல் ஒன்று வருகிறது. அதில் அந்த பொண்ணு சல்மானை என்னமா தடவு தடவுது…

பூச்செண்டு கொடுத்து வாழ்த்து சொல்ல வேண்டும் இசையமைப்பாளருக்கு. பின்னணி இசை அவ்வளவு பிரமாதம். மிரட்டியிருக்கிறார். மாஸ் ஹீரோக்கள் நடிக்கும் மாஸ் படங்களுக்கு எப்படி பின்னணி இசை போட வேண்டும் என்பதை படித்துவிட்டு வந்திருப்பார் போலும். பின்னணி இசை ஒன்றே படத்துடன் ரசிகர்களை ஒன்றிப் போகச் செய்கிறது.

சண்டைக்காட்சிகளை அனல் அரசு செய்திருக்கிறார் போலும். தமிழக சண்டைக்காட்சி நடிகர்களையும் படத்தில் ஆங்காங்கே பார்க்க முடிகிறது.

படத்தின் காட்சிகளில் சீரியஸே இல்லாமல் படம் நகருகிறது. இதனாலேயே படத்தின் காட்சிகள் நம் மனதில் ஒன்றிப் போக மறுக்கின்றன. ஹீரோயின், ஹீரோவின் அண்ணன் வில்லனால் தாக்கப்படும் போது நமக்கு ஒரு ஃபீல் வரணுமே… ஆனால் ஒரு எளவும் வரமாட்டேங்குது… அவன் அடிச்சா என்ன சுட்டா என்ன என்கிற மாதிரி இருக்கிறது. இது போன்று நம்முடன் ஒன்ற மறுக்கும் காட்சிகள்தான் படத்தில் ஏராளம். அவ்வப்போது வரும் காமெடி, சல்மானின் ஆக்க்ஷன், ஹோட்டலில் நடக்கிற சண்டைக்காட்சி மற்றும் க்ளைமேக்சில் வருகிற சண்டைக்காட்சிகள் ரொம்பவே ரசிக்க வைக்கின்றன. அதுவும், க்ளைமேக்ஸ் சண்டைக்காட்சியில் முழுக்க முழுக்க சரளைக்கற்களின் மேல் பாய்ந்து உருண்டு புரண்டு சண்டை போடுவது பிரமிக்க வைக்கிறது.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget