இந்த ஆண்டு புத்தாண்டையும், பொங்கலையும் ரசிகர்கள் கொண்டாட எட்டுப் படங்களுக்கு மேல் ரிலீசாக இருக்கிறது. பிகப் பெரிய ஹீரோக்களின் படங்கள் இல்லையென்றாலும், நடுத்தர ஹீரோக்கள் களம் இறங்குகின்றனர். இதில் நடிகர் விஷால் கதாநாயகனாகவும், த்ரிஷா நாயகியாகவும் நடித்துள்ள சமர் படமும், சுந்தர் சி. இயக்கி, விஷால், அஞ்சலி நடித்துள்ள ‘மதகஜராஜா’ படமும் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்துள்ள படமாகும்.
மேலும் மன்சூரலிகான் தயாரித்துள்ள லொள்ளு தாதா பராக் பராக், அசோக் நடித்துள்ள கோழிகூவுது, முத்தா சீனிவாசன் தயாரிப்பில் உருவான பத்தாயிரம் கோடி, காதல் காவியம், கண்டுப்பிடிச்சிட்டேன், பாரசீக மன்னன், டாக்டர் சரவணன் நடித்துள்ள அகிலன் புதுமுகங்கள் தேவை ஆகிய படங்கள் வெளியாக இருக்கின்றன.