Just Keep Going - இதுதான் படத்தின் tagline. அதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி அருமையாக நியாயப்படுத்துகின்றனர் இந்த Robinsons. தனக்கென யாருமே இல்லை என பெருந்துயரில், அனாதை இல்லத்தில் வளரும் சிறுவன்தான் நம் நாயகன். ஆனா படிப்பில் படு சுட்டி. ஒரு நாள் அறிவியல் கண்காட்சிக்காக தான் செய்யும் ஒரு சின்ன கண்டுபிடிப்பு இந்த உலகின் எதிர்காலத்தையே மாற்றியெழுதப் போகிறது என்று தெரியாமல் செல்கிறான். ஆனால், அந்த கண்டுபிடிப்பு எதிர்காலத்திலிருந்து வந்த வில்லனால்
திருடிச் செல்லப்பட, திரும்பவும் உலகின் தலையெழுத்து எப்படி மாறுகிறது. அதனை நம் நாயகன் எப்படி எதிர்காலத்திற்கே சென்று சமாளிக்கிறான் என்பதுதான் கதை. சுவாரஸ்யமான மற்றொரு விஷயம், எதிர்காலத்தில் தன் சொந்த குடும்பத்தையே சந்திக்கிறான் நாயகன்.
அனிமேஷன் படங்களுக்கே உரித்தான கலர்புல் தன்மையுடன் கொஞ்சம் அதிகமாகவே science fiction கலந்து கலக்கலாகத் தந்திருக்கிறார்கள்.