அசால்ட்டா காமெடி செய்யும் ப்ரியா ஆனந்த்

இங்கிலீஷ் விங்கிலீஷ் புகழ், ப்ரியா ஆனந்துக்கு, தமிழில், அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. இதனால், உற்சாகத்தில் இருக்கும் ப்ரியா, படப்பிடிப்பு தளங்களிலும், படு குஷியாக இருக்கிறாராம். சிவ கார்த்திகேயன் ஜோடியாக, "எதிர்நீச்சல் படத்தில் நடித்து வருகிறார், ப்ரியா ஆனந்த். இந்த படத்தின் படப்பிடிப்பு, சமீபத்தில், சென்னைக்கு அருகே நடந்தபோது, படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க வந்திருந்த ரசிகர்களிடம், இயல்பாகவும், நகைச்சுவையாகவும் பேசியதோடு, சக கலைஞர்களுடனும் ஜோக், கிண்டல், என, வெளுத்து வாங்கினாராம்.
ப்ரியாவின் இந்த காமெடி கலாட்டாக்களால், ஒட்டு மொத்த படப்பிடிப்பு குழுவும், பணிச் சுமை தெரியாமல், உற்சாகமாக இருக்கிறதாம். படத்தின் ஹீரோ சிவ கார்த்திகேயன், "டிவிக்களில், காமெடி ஷோக்கள் நடத்தி, பிரபலமானவன் நான். ஆனால், ப்ரியாவுக்கு, என்னை விட, காமெடி சென்ஸ் அதிகமாக இருக்கிறது. படு அசால்ட்டாக, காமெடி செய்கிறார் என, பாராட்டித் தள்ளி விட்டாராம்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget