ஆர்ட் டைரக்டர் வீரசமர் நடித்த "வீரசேகரன்" படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர்தான் அமலாபால். அதன்பிறகு மாமானாருக்கும் மருமகளுக்கும் தவறான உறவைச் சொன்ன சாமியின் "சிந்துசமவெளி"யில் நடித்தார். அதன்பின் மைனா கொடுத்த வெற்றியால், "தெய்வத்திருமகள்" படத்தில் விக்ரமுடன், "வேட்டை" படத்தில் ஆர்யாவுடன் என டாப் கீயரில் கிளம்பியது அமலா எக்ஸ்பிரெஸ். தெலுங்கு சினிமாவும் அமலாபாலுக்கு காத்திருக்க...
எதையும் சரியாக திட்டமிட்டுச் செய்யும் அமலாபாலின் அம்மா, மகளை அழைத்துக் கொண்டு அமெரிக்கா போனார்.
ஒரு மாதம் அங்கேயே தங்கியிருந்து அழகு சிகிச்சை செய்து கொண்டு திரும்பினார். திரும்பி வந்த அமலவை பார்த்த அனைவரும் ஆச்சர்யப்பட்டார்கள். அந்த அளவுக்கு மினுமினுப்பு ஏறியிருந்தது. தென்னகத்து பிரியங்கா சோப்ரா என்று வர்ணிக்க ஆரம்பித்து விட்டார்கள். இப்போது அமலாபாலிடம் அட்ரஸ் வாங்கிக் கொண்டு நிறைய ஹீரோயின்கள் அமெரிக்காவுக்கு டிக்கெட் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ராதிகா ஆப்தே, ரிச்சா கங்கோபாத்யா, லட்சுமி மேனன் என்று வரிசையாக கிளம்புகிறார்கள். அருகில் உள்ள படத்தை பாருங்கள் "வீரசேகரன்" அமலாபாலுக்கும் தெலுங்கு "நாயக்" அமலாபாலுக்கும் உள்ள வித்தியாசத்தை. அமெரிக்க அழகு சிகிச்சையின் மகத்துவம் புரிகிறதா?