அனுஷ்கா காதலர் தின சிறப்பு பேட்டி


விக்ரமார்க்குடு, வேட்டைக்காரன் என்று மாஸ் படங்கள் ஒருபக்கம். அருந்ததி, வானம் என்று கிளாஸ் படங்கள் மறுபக்கம். இப்படியொரு மாஸ், கிளாஸ் காம்பினேஷனில் கலக்கும் ஒரே தென்னிந்திய நடிகை என்று அனுஷ்காவை சொல்லலாம். இப்போதும் கூட இரண்டாம் உலகம், சிங்கம் 2 என்று இந்த இருவேறு காம்பினேஷனில்தான் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அருந்ததி, வானம் படங்கள் உங்களுக்கு நல்ல பெயரை சம்பாதித்து தந்தன. அப்படியிருக்கையில் அலெக்ஸ் பாண்டியன் போன்ற படங்கள் தேவையா?

தேவைதான்னு நினைக்கிறேன். சினிமாவில் எனக்குன்னு ஒரு மார்க்கெட் இருக்கு, எதிர்பார்ப்பு இருக்கு. அதையெல்லாம் இல்லைன்னு ஒரு அறிமுக நடிகரோடு நடிக்க முடியாது. பெரிய கம்பெனி மாஸ் ஹீரோன்னு வரும்போது அந்த வாய்ப்பை தட்ட முடியாது. அதேநேரம் இரண்டாம் உலகம் மாதிரியான கதைகளில் தேடிப் போய் நடிக்கிறேன். எல்லாத்துக்கும் மேலே படத்தோட கதையும், என்னோட கேரக்டரும்தான் முக்கியம். நீங்க சொல்ற அருந்ததி யில் பெரிய இயக்குனர் இல்லை, அறிமுக நடிகர்தான்... ஆனாலும் கதைக்காகவும், கேரக்டருக்காகவும் நடித்தேன்.

முதல் படத்தில் நடித்த போது தமிழில் உங்களை பலருக்கும் தெரியாது. இப்போது எல்லோருக்கும் தெரிந்த முன்னணி நடிகை. இதை எப்படி பார்க்கிறீங்க?

ஆச்சரியமாக இருக்குங்கிறதுதான் உண்மை. சினிமாவில் அதிர்ஷ்டம் முக்கியம். இப்போ அது எனக்கு இருக்கிறதா நினைக்கிறேன். மற்றபடி பரபரப்பா இருக்கேன். அருந்ததி படம்தான் எனக்கு அதிர்ஷ்டத்தை கொண்டு வந்தது. அதில் நடித்ததுதான் என்னை எல்லோரிடமும் கொண்டு போய் சேர்த்தது. ஆனால் இங்கே நடிகைகள் ஒரு வட்டத்துக்குள்தான் இயங்க முடியுது. நடிகைகள் காலாகாலத்துக்கும் டூயட் பாடிக் கொண்டிருப்பது சரியில்லைன்னு நினைக்கிறேன்.

அருந்ததி, வானம் படங்களுக்குப் பிறகு சார்மி போன்ற பல நடிகைகள் அனுஷ்காதான் பிடித்த நடிகைன்னு சொல்லியிருக்காங்க. உங்களுக்குப் பிடித்த நடிகை...?

நடிகையில்லை, நடிகைகள். இந்தியில் தபு என்னோட ஆல்டைம் பேவரைட். அதேபோல் கஜோல், ஷில்பா ஷெட்டியையும் பிடிக்கும். தமிழில் அஞ்சலி வெரைட்டியா ட்ரை பண்றார். த்ரிஷhவும், நயன்தாராவும் அதிகமாக பிடிக்கும். த்ரிஷா மாதிரி பத்து வருஷமா ஃபீல்டில் முன்னணியில் இருக்கிறது சாதாரணமில்லை.

அமலா பால் உங்க க்ளோஸ் ப்ரெண்ட் இல்லையா...?

எஸ், தெய்வத்திருமகள்லேயிருந்து நல்ல ப்ரெண்ட்ஸாயிட்டோம். அடிக்கடி பேசிப்போம். அப்போதிருந்து எங்க நட்பு தொடருது. அவர் என்னை அனுஷ்னுதான் கூப்பிடுவார். எனக்கு அவர் பால். 

இப்போது நடித்துக் கொண்டிருக்கும் படங்கள்...?

இரண்டாம் உலகம், சிங்கம் 2. இரண்டாம் உலகம் வாய்ப்பை தந்ததுக்கு செல்வராகவனுக்கு நன்றி. அந்த மாதிரி ஒரு கதையை யோசிக்கிறதும் அதை திரைக்கதையாக்குறதும் சாதாரண விஷயமில்லை. செல்வராகவன் அதை திறமையா செய்திருக்கிறார். இதுவரைக்கும் எந்தப் படமும் தராத ஃபீல் அதில் இருக்கு. உங்களை மாதிரியே படத்தைப் பார்க்க நானும் ஆர்வமாக இருக்கேன். அடுத்தது சிங்கம் 2. சூர்யா, ஹரி படம் பத்தி சொல்ல வேண்டியதில்லை. தமிழில் என்னோட் மார்க்கெட்டை உயர்த்தப் போற படமாக இருக்கும்.

குணசேகரின் ரூத்ரம்மா தேவி...?

இப்போ யாரைப் பார்த்தாலும் இந்தப் படத்தைப் பற்றிதான் கேட்கிறாங்க. டைரக்டர் குணசேகரின் ட்ரீம் புராஜெக்ட். இப்போது என்னோட கனவுப் படமும் இதுதான். இதில்என்னோட காஸ்ட்யூம் தொடங்கி எல்லாமே வித்தியாசமாக இருக்கும். வாள் சண்டையெல்லாம் கத்துக்கிறேன். இப்போதைக்கு இவ்வளவுதான் சொல்ல முடியும்.

காதல்...?

அதெல்லாம் தானாக வர்ற விஷயம். இதுவரைக்கும் அது வரலை, வரும் போது கண்டிப்பாக எல்லோருக்கும் தெரியப்படுத்துவேன்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget