காதலிக்கு காதலை எளிதாக தெரியப் படுத்துவது எப்படி

வேலண்டைன் வாரத்தின் இரண்டாவது நாள் தான் ப்ரொபோஸ் டே. இந்த நாளன்று அனைத்து காதலர்களும் தங்கள் காதலை, தம் துணைவரிடம் வித்தியாசமான முறையில் வெளிப்படுத்தி, அவர்களுக்கு ஒருவித சந்தோஷத்தை கொடுப்பார்கள். மேலும் அவ்வாறு வெளிப்படுத்தும் போது, அது அவர்கள் எதிர்பார்க்காத வகையிலும், சற்று ரொமான்ஸாகவும் சொன்னால் நன்றாக இருக்கும்.
மேலும் இந்த நாள் அனைத்து காதலர்களுக்கு ஒரு முக்கியமான நாள் என்று சொல்லலாம். ஏனெனில் இந்த நாளன்று தானே காதலை அழகான முறையிலும், வித்தியாசமான முறையிலும் சொல்வார்கள். இதற்காக பலர் நிறைய வழிகளை யோசிப்பார்கள். குறிப்பாக பெண்களை விட, ஆண்கள் தான் காதலை பலவாறு வெளிப்படுத்த முயல்வார்கள். பெண்களும் அதையே அவர்களிடம் எதிர்பார்ப்பார்கள். அத்தகையவர்களுக்கு, இந்த ப்ரொபோஸ் டே சிறப்பானதாகவும், மறக்க முடியாததாகவும் இருக்க சில டிப்ஸ்களை உங்களுக்காக கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, உங்கள் காதலியை அசத்துங்கள்.

* ரொமான்ஸாகவும், மனதை தொடும் வகையிலும் இருக்க, இருவரும் முதன் முதலில் சந்தித்த இடத்திற்கு அழைத்துச் சென்று, அந்த இடத்தில் அவர்களை விட்டு சற்று தூரம் சென்று, அவர்களை அழைத்து அவர்களிடம் 'ஐ லவ் யூ' என்று சொல்லலாம். முடிந்தால், இந்த இடத்தை சற்று அலங்கரித்து, அவர்களை அழைத்துச் சென்று, சற்று முட்டி போட்டு, கையைப் பிடித்து, அந்த அழகான மூன்று வார்த்தையை சொல்லலாம். இதனால் அவர்களது மனதை எளிதில் வெல்வதோடு, அவர்களுக்கு ஒரு சூப்பரான மறக்க முடியாத நினைவை ஏற்படுத்தியவாறு இருக்கும்.

* பிடித்தவர்களுக்கு ஆச்சரியம் கொடுப்பதை விட மிகவும் ஸ்பெஷலானது வேறொன்றும் இல்லை. அதிலும் பெண்களுக்கு ஆச்சரியம் கொடுத்தால் மிகவும் பிடிக்கும். எனவே அவர்களுக்கு ஆச்சரியத்தை கொடுக்கும் வகையில், அவர்கள் உங்களிடம் இந்த நாளைப் பற்றி பேசி, நீங்கள் சொல்ல வேண்டும் என்று ஆசைப்படும் நேரத்தில், நீங்கள் அதை கண்டு கொள்ளாதவாறு நடந்து, சொல்லப்போனால் அந்த மூன்று வார்த்தை சொல்வதை மறந்துவிட்டது போன்று நடந்து கொண்டு, அவர்களை ஏதேனும் ரெஸ்ட்டாரண்ட் அழைத்துச் சென்று, அவர்கள் முகம் குனிந்து கோபமாக இருக்கும் நேரத்தில், அவர்கள் முன் முட்டி போட்டு, முடிந்தால், கையில் ஒரு மோதிரம் போட்டு, 'ஐ லவ் யூ' சொல்லலாம். இந்த நேரம் எவ்வளவு கோபம் இருந்தாலும், வேலண்டைன் வாரத்தின் இறுதி நாளில் கொடுக்கப்படும் முத்தமானது, இந்த நேரத்திலேயே கிடைக்கும் வாய்ப்புள்ளது.

* பொதுவாக பெண்கள் சினிமாவில் காட்டப்படும் ரொமான்ஸ் காட்சியைப் பார்த்தாலே உருகிவிடுவார்கள். எனவே அதைப் போன்றே, அவர்களுக்கு ஒரு பாட்டு பாடி அல்லது கவிதை எழுதி, அதன் மூலம் அவர்களிடம் காதலை வெளிப்படுத்தினால், அவர்கள் மனதை வெல்வதோடு, அவர்களால் மிகவும் ஈர்க்கப்படுவீர்கள். அதிலும் அந்த பாட்டு, உங்கள் சொந்தப் பாட்டு அல்லது கவிதையாக இருந்தால், உங்கள் மீது காதல் இன்னும் அதிகமாகும்.

* ஒருவேளை காதலை நேரில் வெளிப்படுத்த வெட்கமாக இருந்தால், நமது பாரம்பரிய முறையான கடிதம் மூலமாக வெளிப்படுத்தலாம். அந்த கடிதத்தில், உங்கள் மனதில் உள்ள அனைத்தையும் எழுதிவிட்டு, எதற்காக அவள் உங்களுக்கு வேண்டும், அவள் உங்கள் வாழ்வில் வந்த பின்னர் உங்கள் வாழ்க்கை எப்படி அழகாக மாறியுள்ளது என்பன போன்றவற்றையும் எழுதிக் கொடுக்கலாம்.

இவையே காதலியின் மனதை வெல்வதற்கான சூப்பரான சில ஐடியாக்கள். என்ன நண்பர்களே! இந்த ப்ரொபோஸ் டே-க்கு உங்களது திட்டம் என்ன?

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget