பாலிவுட் நடிகை பிபாஷா பாசு, தனது முகத்தை பெரிய திரையில் பார்க்கும்போது தனக்கே திகிலாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். பிரபல இந்திப்பட இயக்குநர் விஷ்ஹேஷ் பட்டின் ராஸ் மற்றும் ராஸ்௩ என்ற திகில் படங்களிலும், ராம்கோபால் வர்மாவின் தர்ணா ஜாரோரி ஹை திகில் மர்மக் கதை படத்திலும், மகேஷ் மஞ்ச்ரேக்கரின் ராக்த் திகில் படம் உட்பட பல்வேறு திகில் படங்களில் நடித்துவிட்டதால், தற்போது எனது முகத்தைப் பெரிய திரையில் பார்ப்பதற்கே
மிகவும் பயமாக இருக்கிறது. எனினும், இதுபோன்ற திகில் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறேன். என்னை திகில் படங்களுக்கென்று முத்திரை குத்திவிடுவார்களோ என்று கவலைப்படவில்லை. திகில் படவுலகில் என்னுடைய கதாபாத்திரம் விருப்பமாக உள்ளதால், நான் ஏன் அதை செய்யக்கூடாது என்று பிரபல பாலிவுட் நடிகை பிபாஷா பாசு, மும்பையில் நடைபெற்ற ஆத்மா திரைப்பட துவக்க விழாவின்போது நிருபர்களிடம் கூறினார்.