ஒரு அப்பாவும், 11வயது மகள் Nimஉம் பசுபிக் சமுத்திரத்தின் நடுவில் உள்ள ஒரு தீவு ஒன்றில் தனியே வசிக்கிறார்கள். அப்பா ஒரு marine biologist (கடல்வாழ் உயிரின ஆய்வாளர்.) Nimஇன் வாழ்க்கை அப்பாவையும், அந்தத்தீவையும், தனது செல்லப்பிராணிகளயும் சுற்றிப்போகின்றது. இவற்றைத்தவிர Nimஇன் பொழுதுபோக்கு ஒரு கற்பனை கதாநாயகன் Alex Roverஇன் சாகசக் கதைத்தொடர்கள். ஆனால் Nimஐப் பொறுத்தவரை Alex Rover ஒரு நிஜ மனிதர்.
உலகின் அடுத்த பாகத்தில் இந்த கதைதொடரை எழுதிக்கொண்டிருப்பவர் Alexandra Rover – ஒரு பெண் எழுத்தாளர்; உலகின் பல்வேறுபாகங்களிலும் சாகசங்களை நிகழ்த்தி வரும் கதாநாயகனைப்பற்றி எழுதிவரும் இவரோ agoraphobia என்னும் வருத்தத்தைக் கொண்டிருக்கிறார். அதாவது தனது வீட்டை விட்டு வெளிவர இவரிற்குப் பயம்; இவரது முழு வாழ்க்கையுமே நான்கு சுவர்களிற்கு உள்ளேதான். இவை இவ்வாறு இருக்க, Nimஇன் அப்பா ஒரு புயற்காற்ற்ல் அகப்பட்டு கடல் நடுவில் தொலைந்துவிடுகிறார். இதே நேரம் தற்செயலாக Nimஉடன் தொடர்பை ஏற்படுத்துகிறார் Alexandra, Alex என்ற சுருங்கிய பெயருடன். தனது பிரபல்யமான கதாநாயகனிடமிருந்து மின்னஞ்சல் கிடைத்ததில் மிகவும் மனம் மகிழ்ந்த Nim, Alexஐ தனது துணைக்கு வரச்சொல்லி நிர்ப்பந்திக்கிறாள். Nimக்கு துணக்கு எவருமேயில்லை என்று அறிந்த Alexandra தனது agroaphoic பயத்தையும் மீறி Nim’இன் தீவுக்கு புறப்ப்டுகின்றார்.
அலட்டிக்கொள்ளாத, குடும்பத்துடன் பார்ப்பதற்கான ஒரு படம். Nim பாத்திரத்தில்வரும் Abigail Breslin 10வயதில் Oscarஇற்றுத்தெரிவு செய்யப்பட்ட சிறுமி. Nim பாத்திரத்தை இலகுவாக கையாண்டிருக்கிறார். அவ்வாறாகவே Alexandraஆக வரும் ஹாலிவூட்டில் பழம் தின்று கொட்டை போட்ட Jodie Foster (இரு முறை Oscarவென்றவர்.) அண்மைய பிரபல்யமான Gerald Butlerஉம் (“Phantom of the Opera”, “300″, “PS: I love you”) தனதுபாத்திரங்களை (அப்பா, Alex Rover) நேர்த்தியாகச்செய்திருக்கிறார். எனது குறையெல்லாம் இவர்களின் தோள்களில் இன்னமும் எவ்வளவோ பாரம் ஏற்றியிக்கலாம் என்பதுதான்.
கதை சாதாரண சிறுவர் கதைதான், எவ்விதமான திடீர்த் திருப்பங்களும் இல்லை. என்றாலும் ஒரு அழகான படம். Nimஇன் செல்லப் பிராணிகளிற்காகவாது (sea lion, chameleon, pelican) படத்தைப் பார்க்கலாம்.