கமலின், "விஸ்வரூபம் படத்தில் நாயகியாக நடித்தவர் பூஜா குமார். இவர், 1997ல் கேயார் இயக்கிய, "காதல் ரோஜாவே என்ற படத்தில் அறிமுகமானவர். அதைத் தொடர்ந்து, தமிழ், மலையாளம், இந்தி, ஆங்கிலம் என, பலமொழிகளிலும் பரவலாக நடித்து வந்த பூஜா குமார், பதினைந்து ஆண்டுகளுக்கு பிறகு, "விஸ்வரூபம் மூலம் மீண்டும் தமிழில் மெகா என்ட்ரி கொடுத்திருக்கிறார்.
இப்படம் தமிழைப் போலவே இந்தியிலும் வெற்றி பெற்றதையடுத்து, பாலிவுட் பட வாய்ப்புகள் பூஜாவுக்கு கிடைத்துள்ளதாம். அதனால் மீண்டும் இந்திய படங்களில் பிசியாகிறார் அவர். இந்நிலையிலும் ஆங்கில படங்களில் நடிப்பதில் கூடுதல் கவனம் செலுத்தும் பூஜா, இப்போதும் குறும்படங்கள் தயாரிப்பது, குச்சுப்புடி, கதக், பரதம் போன்ற நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்பது என, தொடர்ந்து வருகிறார். இந்த பூஜா குமாருக்கு இப்போது வயது, 36 என்பது குறிப்பிடத்தக்கது.