உலகில் அதிகளாவானவர்களால் பயன்படுத்தப்படும் மின்னஞ்சல் சேவையில் இரண்டாம் இடத்தில் காணப்படும் யாகூவின் மின்னஞ்சல் சேவையினை விண்டோஸ் 8 இயங்குதளத்தினைக் கொண்ட கணனிகளில் நேரடியாகவே பெற்றுக்கொள்வதற்கென புதிய அப்பிளிக்கேஷன் ஒன்று அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. அதாவது குறித்த ஒரு யாகூ மின்னஞ்சல் முகவரிக்கு வரும் மின்னஞ்சல்களை
பார்வையிடுவதற்கு பயனர் பெயர், கடவுச்சொல் என்பனவற்றினைக் கொண்டு ஒவ்வொரு தடவையும் அவ் மின்னஞ்சல் சேவையினுள் உள்நுழைய வேண்டிய தேவை காணப்படுகின்றது.
எனவே, இதனைத்தவிர்த்து ஒரு முறை மின்னஞ்சல் கணக்கினுள் உள்நுழைவதன் மூலம் தொடர்ச்சியாக வரும் மின்னஞ்சல்களை நேரடியாகவே இந்த அப்பிளிக்கேஷன் மூலம் பெற்றுக்கொள்ள முடிவதுடன் புகைப்படங்கள், வீடியோக்கள், ஏனைய கோப்புக்கள் போன்றவற்றினை பகிரக்கூடிய வசதியும் காணப்படுகின்றது.
மேலும் இந்த அப்பிளிக்கேஷனை விண்டோஸ் 8 இயங்குதளத்தில் செயற்படும் டேப்லட்களிலும் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.