விஸ்வரூபம் எதிர்ப்பு காட்சிகளை நீக்க கமல் சம்மதம் - எதிர்பாளர் ஒப்புதலுடன் படம் வெளியாகிறது


விஸ்வரூபம் படத்தில் இஸ்லாமியர் எதிர்க்கும் காட்சிகளை நீக்குதல் குறித்த முத்தரப்பு பேச்சு வார்த்தையில் சுமூகமான உடன்பாடு ஏற்பட்டது. இஸ்லாமிய அமைப்புகள் எதிர்த்த 7 காட்சிகளை நீக்க கமல் சம்மதித்துள்ளார். இந்தக் காட்சிகள் அனைத்தும் இஸ்லாமியரை அவமதிப்பதாகவும், இஸ்லாம் மதத்துக்கு எதிரானதாகவும் உள்ளது என முஸ்லிம் தலைவர்கள் சொன்னதை கமல் ஏற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து படத்தை வெளியிட
இஸ்லாமிய அமைப்பினர் ஒருமனதாக சம்மதித்தனர். இந்த முடிவு ஏற்பட காரணமான தமிழக முதல்வருக்கு நன்றி தெரித்தார் கமல். சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த இந்தப் பேச்சுவார்த்தையில் படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான கமல்ஹாஸன், அவரது அண்ணன் சந்திரஹாஸன் ஆகியோர் நேரில் பங்கேற்றனர். மாலை 6 மணிக்கு பேச்சு வார்த்தை நிறைவடைந்தது. இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த 24 அமைப்புகளின் பிரதிநிதிகளுடன், தலைமைச் செயலர், உள்துறைச் செயலர், போலீஸ் கமிஷனர் மற்றும் அதிகாரிகள் ஆகியோரும் இந்த பேச்சில் பங்கேற்றுள்ளனர். மாலை 3 மணிக்குத் தொடங்கிய பேச்சு வார்த்தை சுமுகமாக முடிந்ததாக, நிருபர்களிடம் கமல் தெரிவித்தார். முதல்வருக்கு நன்றி... மேலும் கூறுகையில், "இப்படியொரு சந்திப்புக்கு வாய்ப்பு அமைத்துத் தந்த மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு மிக்க நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்," என்றார் கமல். மேலும் இது தொடர்பான அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெறுவதாக கமல் கூறினார். அரசும் தடையை விலக்கிக் கொள்ளும் என்று நம்புவதாகக் கூறினார். ரிலீஸ் தேதியை இன்று இரவுக்குள் அறிவிப்பதாக கமல் தெரிவித்தார்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget