கரு கலைவதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. தாயின் உடல்நிலையும், கருவை தாங்கும் சத்தும் இல்லாததே முக்கிய காரணமாக கூறப்படுகிறது. கருச்சிதைவிற்காக பல்வேறு காரணங்களை மகப்பேறு மருத்துவர்கள் பட்டியலிட்டுள்ளனர்.
கருவானது கர்ப்பப் பையில் சரியான வளர்ச்சி பெறாமல் இருந்தால் கருச்சிதைவு அபாயம் ஏற்படும். அதேபோல் கருவானது கருப்பையில் சரியான முறையில் தங்காமல் இருத்தலும், கருப்பையின் வாய் திறந்திருத்தலும் அபார்சன் ஏற்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இத்தகைய பிரச்சினைகளை சரிசெய்ய தகுந்த மருத்துவரை அணுகுவது மிகவும் அவசியம். கருப்பையில் கரு சரியாக உருவாகாத பட்சத்தில் கருச்சிதைவு தானாகவே ஏற்பட்டு விடும். இதேபோல் கருப்பையின் பொசிஷன் சில பெண்களுக்கு ஏடாகூடமாக அமைந்திருப்பதால் கருச்சிதைவு தவிர்க்க முடியாததாகி விடுகிறது.
இரட்டைக் கருப்பை இருப்பதனாலும் கருச்சிதைவு ஏற்பட்டு விடுகிறது. கருப்பையில் ஃபைபிராய்டு கட்டிகள் தோன்றுவதால் கருச்சிதைவு ஏற்படுகிறது. தொற்று நோய்களால் பாதிக்கப்படும்போது கருச்சிதைவு ஏற்படுகிறது.