வீட்டில் கையை கடிக்காமல் பட்ஜெட் போடுவது எப்படி?

செலவுகள் எக்குத் தப்பா எகிறிக்கிட்டே போகுதுப்பா... ஒண்ணும் சமாளிக்க முடியல...' என்ற புலம்பலை இன்று நடுத்தர குடும்பங்களில் பரவலாகக் கேட்க முடிகிறது. விலைவாசி உயர்வு நம் கையில் இல்லை. ஆனால் செலவுகளைக் கட்டுப்படுத்திக்கொள்வதும், வருமானத்தை உயர்த்திக்கொள்வதும் நம் கையில்தான் இருக்கின்றன. 

வருமானத்தை அதிகரிக்கும் வழி என்று யோசிக்கும் போதே நமக்கு முதலீடுகள் ஞாபகம் வரும். வருமானத்தை அதிகரிக்கும் விதமாக முதலீடுகளில் ஈடுபட ஆர்வம் காட்டுவது நல்லது தான். ஆனால் அதற்கு முன் ஒருவர் தனது வரவு- செலவு ஏற்றத்தாழ்வுகளைச் சரிசெய்ய வேண்டும். 

நமது அன்றாடச் செலவுகள், வருவாய்க்குப் பொருந்தாமல் இருந்தால், நம்மால் பொருளாதார ரீதியாகப் பெரிதாக முன்னேற்றம் காண முடியாது. வழக்கமான செலவுகள், எதிர்பாராத செலவுகளையும் தாண்டி ஒரு நிலையான, உத்தரவாதமான வருமானம் இருந்தால் தான் நம்மால் நீண்டகால அடிப்படையில் முதலீட்டை மேற்கொள்ள முடியும். 

இவ்வாறு இல்லாவிட்டால், போதுமான நிதி ஒழுங்கைக் கடைப்பிடிக்காவிட்டால், நீண்டகால சேமிப்பு அல்லது முதலீட்டுத் திட்டங்கள் தடுமாறித் தள்ளாடி நின்று போகும். இன்றைய நிலையில், மிகவும் வசதியானவர்களைத் தவிர மற்றவர்கள் தங்கள் வருவாயுடன் செலவுகளைக் கவனமாக ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியுள்ளது. 

பணவீக்கத்தால் நெருக்கடி அதிகரிக்கும் நிலையில், வருமானம் மேலும் அதிகரிக்காத சூழ்நிலையில் குடும்பங்கள் தங்கள் அன்றாடச் செலவுகளைச் சமாளிக்கக் கஷ்டப்பட வேண்டியுள்ளது. வழக்கமான செலவுகளுடன், காய்ச்சல், மருத்துவமனைச் சிகிச்சை, விபத்து, இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் இழப்புகள் போன்ற எதிர்பாராத செலவுகளையும் எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது. 

இந்தச் செலவுகளைச் சமாளிக்கத் தகுந்த காப்பீடுகளைப் பெற்றிருப்பது அவசியம். நாம் என்னதான் கட்டுப்பாடாக இருந்தாலும் சிலவேளை நிதி ஆலோசனைகளில் கடன் என்பது தவிர்க்க முடியாமல் போய்விடும். நாம் பல்வேறு வழிகளில் கடன் பெறுகிறோம். 

உள்ளூர் மளிகைக் கடைக்காரரிடம் பொருட்களைப் பெற்று, அடுத்த மாத ஆரம்பத்தில் பணம் கொடுப்பதும் ஒரு வகைக் கடன் தான். சிலர் தங்கள் உறவினர்கள், நண்பர்களிடம் கைமாற்றாகக் கடன் பெறுவார்கள். தங்கள் முதலாளி அல்லது நிறுவனத்திடம் அட்வான்சாக தொகை பெற்று, தவணையில் திருப்பிச் செலுத்துவோரும் உண்டு. 

சீட்டுப் பணம் கட்டி ஒரு தொகையைப் பெறுவது, தங்கம், வெள்ளி நகை, பொருட்களை அடகு வைத்துப் பணம் பெறுவது, வட்டிக்காரரிடம் வட்டிக்குப் பணம் பெறுவது என்று பல வழிகள் இருப்பது உங்களுக்குத் செலவுகளைச் சமாளிக்கவும், 

அவசரத் தேவைகளுக்கும் இதுபோன்ற முறைசாரா கடன்களை பலரும் நாடுகின்ற இந்த முறைசாரா அல்லது வழக்கத்தில் அல்லாத கடன் முறைகளில் சில பொதுவான அம்சங்கள் இருக்கின் முதலாவதாக, நன்கு தெரிந்த நபர்களுக்கு இடையில் தான் கொடுக்கல்- வாங்கல் நடைபெறும். இங்கு பெரும்பாலும் நம்பிக்கையின் அடிப்படையிலேயே கடன் கொடுக்கப்படுகிறது. 

எனவே குறிப்பிட்ட காலத்தில் பணத்தைத் திருப்பிச் செலுத்துவதற்கான சமூக அழுத்தமும் இரண்டாவதாக, குறைவான ஆவண வேலை அல்லது அது இல்லாமலேயே கடன் கொடுக்கப்படுவதால், அதிகக் கெடுபிடி, தாமதம் இன்றிப் பணம் அளிக்கப்படுகிறது. மூன்றாவதாக, கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறுவது பெரிய குற்றமாகக் கருதப்படுகிறது. 

குறிப்பிட்ட நபர் மறுபடி கடன் கேட்கும் வாய்ப்பு பறிபோகும். அடகு வைக்கப்பட்ட பொருளுடன், கடன் பெற்றவரின் கவுரவமும் பறிபோ நீங்கள் ஒரு நண்பருக்குப் பணம் கொடுத்து அதை அவர் திருப்பித் தரத் தவறும்போது, நீங்கள் பணத்துடன் நண்பரையும் இழக்கிறீர்கள். எனவே முறைசாரா கடன்களிலும் ஒரு முறையை கடைபிடியுங்கள்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget