குழந்தைகளுக்கு உடற்பயிற்சி தேவையா?

குழந்தைப் பருவம் என்பது ஓடியாடி உடல் எலும்புகளுக்கு எனர்ஜி கொடுக்க வேண்டிய பருவம். அதற்காக குழந்தைகளை உடற்பயிற்சி செய்யச் சொல்லி வற்புறுத்த முடியாது. குழந்தைகளுக்கு உடற்பயிற்சியின் அவசியமெல்லாம் புரியாத வயது அது. 
எனவேதான் பள்ளிக்கூடங்களில் விளையாடுவதற்கென்றே நேரம் ஒதுக்கப்பட்டது. ஆனால் இன்று, விளையாட்டு நேரத்தை பிள்ளைகளின் பாடப் புத்தகங்கள் விழுங்கி விடுகின்றன. குழந்தையின் உடலுக்கு அன்றாடப் பயிற்சி என்பது அத்தியாவசியம். 

குழந்தைகளுக்கு என்ன விளையாட்டில் ஆர்வம் இருக்கிறதோ அதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுங்கள். சைக்கிள் ஓட்டச் சொல்லுங்கள். சிறுவயதிலேயே உடற்பயிற்சி நடைமுறை படுத்த பழகினால் தான் அவர்களுக்கு உடற்பயிற்சியால் கிடைக்கும் நன்மைகள் பற்றி அறிய முடியும். 

சிறு வயதில் நடைபயிற்சி, சைக்கிள் பயிற்சி, நீச்சல், ஸ்கிப்பிங்,யோகா போன்ற பயிற்சிகளை செய்வதன் மூலம் அவர்களுக்கு தேவையான சக்தி கிடைக்கிறது. இவைகளை தொடர்ந்து செய்து வந்தாலே உங்கள் குழந்தைகளிம் மாற்றம் ஏற்படுவதை காணலாம். 

சிறு வயதில் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை குழந்தைகளிடம் ஏற்படுத்தினால் தான் எதிர்காலத்தில் அவர்கள் உடல் ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி அவசியம் என்பதை உணர முடியும். 

உங்கள் குழந்தைகள் எதிர்காலத்தில் ஆரோக்கியத்துடனும், வலிமையுடனும் இருக்க வேண்டுமெனில் குழந்தை பருவத்திலேயே உடற்பயிற்சி மிகவும் இன்றியமையாதது என்பதை உங்கள் குழந்தைகளுக்கு உணர்த்த வேண்டும்..
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget