விண்டோஸ் கணினிகளில் ஆப்ஜெக்டை காப்பி செய்வது எப்படி?

விண்டோஸ் சிஸ்டத்தில், அதன் கிளிப் போர்டில், ஏதேனும் டெக்ஸ்ட் அல்லது ஆப்ஜெக்ட் ஒன்றை காப்பி செய்தால், அது அங்கு தங்கும். ஆனால், இரண்டாவதாக ஒன்றைக் காப்பி செய்திடுகையில், முதலில் காப்பி செய்தது மறைந்து போகும். இதன் எண்ணிக்கையை நாம் அதிகரிக்க இயலாது. இந்தக் குறையினைத் தீர்க்க நமக்குக் கிடைக்கும் இலவச புரோகிராம் விண் கிளிப்பர் (Winklipper) இதனை
http://sourceforge.net/projects/winklipper/ என்ற முகவரியிலிருந்து இலவசமாக டவுண்லோட் செய்து கொள்ளலாம். இது ஒருஸிப் பைலாகக் கிடைக்கும். இதனை விரித்து ஒரு புரோகிராம் பைலாக வைத்துக் கொள்ளலாம். அல்லது யு.எஸ்.பி. பிளாஷ் டிரைவில் வைத்து இயக்கலாம். உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்திட வேண்டியதில்லை. இந்த புரோகிராமினை இயக்கியவுடன் இது விண்டோஸ் சிஸ்டம் ட்ரேயில் அமர்ந்து கொண்டு நீங்கள் காப்பி செய்வதனைக் கண்காணித்துக் கொண்டிருக்கும். சிஸ்டம் ட்ரேயில் உள்ள இதன் ஐகானைக் கிளிக் செய்து, விண் கிளிப்பரில் எத்தனை ஆப்ஜெக்ட் காப்பி செய்து வைத்துக் கொள்ள வேண்டும் என்பதனை முடிவு செய்து செட் செய்து கொள்ளுங்கள். ஒன்றுக்கு மேற்பட்ட ஆப்ஜெக்ட் காப்பி செய்யப்பட்டிருந்தால், இந்த ஐகானில் கிளிக் செய்திடவும். நீங்கள் காப்பி செய்த வரிசைப்படி அவை காட்டப்படும். உங்களுக்கு எது தேவையோ அதனைக் கிளிக் செய்தால், அது விண்டோஸ் கிளிப் போர்டுக்குச் செல்லும். பின் அதனை வழக்கம்போல பேஸ்ட் செய்திடலாம். இது விண்டோஸ் எக்ஸ்பி, விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 ஆகியவற்றில் செயல்படுகிறது.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget