இரவு நேர வேலைக்கு செல்லும் பெண்களா நீங்கள்?

15 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நைட்ஷிப்ட் வேலை பார்க்கும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் தாக்கும் வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. கனடாவை சேர்ந்த உடலியல் ஆராய்ச்சியாளர்கள், இரவு பணியில் இருக்கும் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து ஆய்வு செய்தனர். பெண்களுக்கு பெரும் பிரச்னையாக இருக்கும் மார்பக புற்றுநோய் குறித்து இதில் தீவிரமாக ஆராயப்பட்டது.
இரவு பணியில் இருக்கும் பெண்களுக்கு விட்டமின் டி குறைவதும், வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றமும்தான் புற்றுநோய் பாதிப்புக்கு காரணம் என்கின்றனர் ஆய்வாளர்கள். 

கனடாவின் வான்கூவர், பிரிட்டிஷ் கொலம்பியா, கிங்ஸ்டன், ஆன்டாரியோ நகரங்களில் மார்பக புற்றுநோய் பாதித்த 1,134 பெண்களிடமும், அதே வயதில் நோய் பாதிக்காத 1,179 பெண்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது.

ஆய்வில் பங்கேற்ற பெண்களில் 3ல் ஒருவர் தொடர்ந்து இரவு பணியில் வேலை பார்ப்பவர். 15 முதல் 29 வயது வரையில் அதாவது 14 ஆண்டுகள் வரை தொடர்ந்து இரவு பணிக்கு சென்றுவந்த பெண்களுக்கு எந்த பாதிப்பும் தெரியவில்லை. ஆனால், 30 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள், தொடர்ந்து இரவு பணியில் இருந்த பெண்களுக்கு மார்பக புற்றுநோய்க்கான வாய்ப்பு 2 மடங்காக இருந்தது. இதற்கு முக்கிய காரணம், உடல் சுரப்பிகள்தான்" என்று தெரிய வந்துள்ளது.

அதாவது தூங்காமல் வேலை செய்வதால், உடலில் தூக்கத்தை ஏற்படுத்தக் கூடிய சுரப்பியில் பாதிப்பு ஏற்படுகிறது. தூக்கத்தை கட்டுப்படுத்தவும் மற்றும் தூக்கத்தை வரழைக்கவும் உதவும் மெலடோனின் சுரப்பு குறைய ஆரம்பிக்கிறது.

நைட் ஷிப்ட் வேலையினால் உடல் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படுகிறது. உடல் பாதிக்கப்படுகிறது. மேலும் விட்டமின் டி குறைவது, உடல் கடிகாரத்தில் மாற்றம் ஏற்படுவது, ஆகிய அனைத்தும் மார்பக புற்றுநோய் மற்றும் உடலில் கட்டிகள் போன்றவற்றுக்கு முக்கிய காரணமாகின்றன என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget