லோன் ரேஞ்சர் ஹாலிவுட் சினிமா விமர்சனம்

நடிகர் : ஜானி டெப்
நடிகை : ரூத் வில்சன்
இயக்குனர் : கோரே வேர்பின்ஸ்கி
இசை : ஹான்ஸ் சிம்மர்
ஓளிப்பதிவு : போஜன் பேஸிலி

வெள்ளி கடத்தலை தடுக்க முயற்சிக்கும் இரண்டு பேரின் நகைச்சுவை கலந்த ஆக்ஷன் கதை. ஒரு சிறுவனிடம் டான்டோ என்ற கதாபாத்திரம் கதையை சொல்வது
போல் ஆரம்பிக்கிறது படம். 

பழங்குடியினர் வசிக்கும் ஊரில் வாழும் டான்டோ இரண்டு வெள்ளையர்கள் ஆற்றில் மிதப்பதை கண்டு அவர்களை மீட்டு தன் ஊருக்கு கொண்டு வந்து காப்பாற்றுகிறான். அப்பொழுது ஆற்றில் வெள்ளிக்கல் ஒன்று மிதக்கிறது. 

அதைக்கண்ட வெள்ளையர்கள் சிறுவனிடம் அந்த வெள்ளிக்கல் எங்கிருந்து வருகிறது என்று கேட்க அதனை சிறுவன் சொல்ல மறுக்கிறான். எனவே அந்த சிறுவனிடம் தங்களிடம் உள்ள வெள்ளி கடிகாரத்தை காண்பித்து அதனை அவனுக்கு கொடுப்பதாக சொல்லி அவனிடம் வெள்ளிக்கல் இருக்கும் இடத்தை பற்றிய உண்மையை அறிந்து கொள்கின்றனர். 

அதன்பின் வெள்ளையர்கள் இருவரும் வெள்ளி பற்றிய விஷயம் வெளியே தெரியாமல் இருப்பதற்காக பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமத்தையே அழிக்கின்றனர். இதில் அந்த சிறுவன் மட்டும் உயிர் தப்புகிறான். 

இது ஒருபுறம் இருக்க... 

டெக்ஸாஸ் நகரில் போலீஸ் அதிகாரி டான் ரெய்டு தனது அரசு அதிகாரி லாத்தம் கோல் உத்தரவின்பேரில் இண்டியன் பார்டருக்கு கைதி ஒருவனை பிடிக்க போலீஸ் அதிகாரிகளுடன் தன் தம்பி ஜானையும் அழைத்துச் செல்கிறார். அங்கு கைதி கும்பலால் டான் ரெய்டும் மற்ற போலீஸ் அதிகாரிகளும் கொல்லப்படுகின்றனர். டான்டோவால் ஜான் காப்பாற்றப்படுகிறான். 

இதற்கிடையே டெக்ஸாஸிலிருந்து சிகாகோவிற்கு ரயில் பாதை ஒன்று அமைக்கப்படுகிறது. லாத்தம் கோல் ரயில் பாதையை தொடங்கி வைப்பதை இருவரும் காண்கிறார்கள். ஒரு கட்டத்தில் அந்த கைதி புட்ஜ் கேவன்டிஷ், ஜான் அண்ணனின் மனைவியையே கடத்தி வருகிறான். இவனுடன் ஜான், டான்டோ இருவரும் சண்டையிடுகின்றனர். 

இதில் டான்டோ கைதி புட்ஜ் கேவன்டிஷ்யை கொல்ல முயற்சிக்கும் போது, கைதியை சட்டம் முன் நிறுத்த வேண்டும் என கூறி ஜான் அவனை தடுத்து நிறுத்துகிறார். கைதியை டெக்ஸாஸ் நகருக்கு கைது செய்து அழைத்து வருகின்றான். 

ஜான் அழைத்து வந்த கைதிக்கு சரியான தண்டனை கிடைத்ததா? வெள்ளியை கடத்த முயன்ற கும்பல் என்னானது? டான்டோ தன் இன மக்களை அழித்ததற்காக பழி தீர்த்தானா? என்பதே மீதிக்கதை. 

படத்தின் முதல் பாதி நகைச்சுவையாக நகர்ந்து சென்றாலும் இரண்டாம் பாதி கடத்தல், சண்டை என்று செல்கிறது. ஜானி டெப் தன்னுடைய கதாபாத்திரத்தை தன்னுடைய பாணியில் மிகச்சிறந்த முறையில் வெளிப்படுத்தியிருக்கிறார். படத்திற்கு இவரது நடிப்புடன் கூடிய நகைச்சுவை பலம் சேர்த்துள்ளது. 

லோன் ரேஞ்சராக வரும் ஆர்மி ஹேமர் நடிப்பில் கனகட்சிதம். தன்னுடைய கதாபாத்திரத்தில் முதல் பாதியில் அப்பாவியான தோற்றத்திலும் இரண்டாம் பாதியில் அதிரடி லோன் ரேஞ்சராக நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். 

இயக்குனர் கோரே வேர்பின்ஸ்கியின் திரைக்கதையில் ஆங்காங்கே தொய்வு ஏற்பட்டாலும் படத்தை விறுவிறுப்பாக ஆக்ஷன் கலந்த நகைச்சுவையில் நகர்த்தியிருக்கிறார். இதன் மூலம் அவர் ஒரு சிறந்த இயக்குனர் என்பதை மறுபடியும் நிருபித்திருக்கிறார். 

ஒளிப்பதிவாளர் போஜன் பேஸிலி டெக்ஸாஸ் அழகை நம் கண்முன் நிறுத்தியிருக்கிறார். முக்கியமாக ரயில் சண்டைக்காட்சிகளை தத்ரூபமாக எடுத்து கைத்தட்டல் பெறுகிறார். ஹான்ஸ் சிம்மரின் பின்னணி இசை காட்சிகளுக்கு பலம் சேர்த்திருக்கிறது. 

மொத்தத்தில் ‘லோன் ரேஞ்சர்’ சாகசங்கள் நிறைந்த பொழுதுபோக்கு படம்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget