சிலுக்கை ஒவர் டேக் செய்த நடிகை?

சில்க் ஸ்மிதா பெயரைச் சொல்லி ஒவ்வொரு உட்டாக குப்பையைக் கொட்டி வருகின்றனர். அந்த வகையில் சில்க்கின் கதை என்று கூறி படு கிளாமரான கவர்ச்சிகரமான வேடத்தில் வீணா மாலிக்கை நடிக்க வைத்து கன்னடத்தில் ஒரு படம் தயாராகி வருகிறது. சில்க் கூட இப்படிக் கவர்ச்சிகரமாக நடித்ததில்லையே என்றுதான் வீணாவின் அரை குறை அதிரிபுதிரி கவர்ச்சி போஸ்களைப் பார்க்கும்போது உணர முடிகிறது.
உண்மையிலேயே சில்க்குக்கு நல்ல பெயரை இந்தப் படம் பெற்றுத் தருமா அல்லது சில்க்கின் பெயரைக் கெடுக்குமா என்பது படம் வந்தால்தான் தெரியும்.

சில்க் ஸ்மிதாவின் கதை என்று கூறி முதலில் டர்ட்டி பிக்சர்ஸ் இந்திப் படம் வந்தது.

இப்படத்தில் சில்க் கதாபாத்திரத்தில் வித்யா பாலன் நடித்திருந்தார். உண்மையிலேயே திரில்லான கவர்ச்சியை அதில் கொடுத்திருந்தார் வித்யா.

அதேபோல மலையாளத்தில் சனா கானை நாயகியாக வைத்து சில்க் கதை என்று கூறி ஒரு படம் வந்தது. அதில் சனா கானின் கவர்ச்சிதான் மேலோங்கியிருந்ததே தவிர சில்க்கை நினைவுபடுத்தவில்லை அவரது கவர்ச்சியும், நடிப்பும்.

தற்போது வீணா மாலிக்கை வைத்து கன்னடத்தில் சிலிக் சக்கத் மகா என்ற பெயரில் ஒரு படம் உருவாகி வருகிறது.

இதுவும் சில்க் ஸ்மிதா கதைதான் என்று கூறியபடி படம் எடுக்கிறார்கள். மற்றவர்களுக்கு குழப்பமாகி விடக் கூடாதே என்ற நல்லெண்ணத்தில் சில்க் என்ற பெயரை தைரியமாக படத்திலேயே வைத்து விட்டனர்.

ஆனால் இந்தப் படத்தில் சில்க் ஸ்மிதாவை விட படு மோசமான கவர்ச்சியுடன் வீணா மாலிக் உலா வந்துள்ளாராம்.

சமீபத்தில் தாய்லாந்துக்குப் போய் அங்கு குஜாலான பாட்டு ஒன்றை சுட்டுள்ளனர். இதில் முழுக்க முழுக்க வீணா மாலிக்கை உரித்துக் காட்டி விட்டார்களாம்.

இந்தப் பாடலுக்கு முன்பு படப்பிடிப்புத் தளத்தில் சின்ன விபத்தை சந்தித்து காயமடைந்திருந்தார் வீணா. இருப்பினும் காயத்தைப் பொருட்படுத்தாமல் இந்தப் பாட்டுக்கு ஆடிக் கொடுத்தாராம.

படப்பிடிப்புத் தளத்தில் காலில் அடிபட்டு விட்டதாம் வீணாவுக்கு.விரலிலிருந்து ரத்தம் குபுகுபுவென கொட்டியபோதிலும் நடிப்பதை நிறுத்தவில்லையாம் வீணா. பாண்டேஜ் போட்டுக் கொண்டு தனது திறமையைக் காட்டினாராம்.

இந்தப் பாட்டை தாய்லாந்து பீச்சில் வைத்து படம் பிடித்தார்களாம். பிகினி உடையில் முழுக் கவர்ச்சியுடன் ஆடிய அவருடன் ஹீரோ அக்ஷயும் கூட மாட ஆடினாராம்.

இந்தப் பாடலுக்கு ஆடியது குறித்து வீணா கூறுகையில், ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. எனது போர்ஷன் முடிந்து விட்டது. காலில் காயத்துடன் ஆடினேன். கஷ்டமாகத்தான் இருந்தது. இருந்தாலும் ஆடி முடித்து விட்டேன். நன்றாகவும் வந்துள்ளது.

நான் ஒரு சூப்பர் உமன். என்னை யாரும் தடுத்து நிறுத்த முடியாது. காயமடைந்திருந்தாலும் கூட எனது நடிப்பை நான் விடவில்லை என்றார் வீணா. பட்ட கஷ்டமெல்லாம் வீணா போகாம இருந்தா சரித்தான் தாயி...!

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget