புகை பிடிப்பதை நிறுத்த எளிய வழிகள்

சிகரெட் பிடிப்பதை நிறுத்துவது என்பது எளிதானதுதான் நீங்கள் உறுதியாக முடிவெடுத்துவிட்டால். அப்படி சிகரெட் பிடிப்பதை நிறுத்த வேண்டும் என்று விரும்பினால் அதற்கான 10 வழிகளைப் பாருங்கள்.

சிகரெட் பிடிப்பதை விடுவதில் உள்ள நன்மைகளை சிந்தியுங்கள்

சிகரெட் பிடித்துக் கொண்டிருக்கும்
ஒருவர், அதனை நிறுத்துவதால், உடல் நிலை அதிக முன்னேற்றம் அடைகிறது. சிகரெட் பிடிப்பதை விடுவதால் நீங்கள் ஆரோக்கியமானவராக வாழப் போகிறீர்கள் என்பதை அடிக்கடி நினைத்துப் பாருங்கள்.

உங்களுக்குப் பிடித்தமான ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள்

சிகரெட்டை விடும் போது, உங்களுக்குப் பிடித்தமான ஒன்றை அடிக்கடி சாப்பிடுங்கள். ஆப்பிள், இனிப்பு, சிப்ஸ் என எதுவாக இருந்தாலும், எப்போது எல்லாம் சிகரெட் பிடிக்க வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்போது உங்களுக்குப் பிடித்தமான ஒன்றை எடுத்து சாப்பிடுங்கள்.

உடனே நிறுத்த வேண்டாம்

சிகரெட்டைப் போறுத்தவரை உடனடியாக நிறுத்தக் கூடாது. அவ்வாறு நிறுத்தினால், ஒரு கட்டத்தில் மீண்டும் சிகரெட் பிடிக்கும் நிலைக்கு தள்ளப்படலாம். எனவே, ஒரு நாளைக்கு 5 சிகரெட் பிடித்து வந்தீர்களானால், ஒரு வாரம் 4 ஆகக் குறைத்து, அடுத்த வாரம் 3 என தொடர்ந்து குறைத்து கடைசியாக சிகரெட் பிடிப்பதை நிறுத்துவதே சிறந்த வழியாகும்.

உடற்பயிற்சி அவசியம்

சிகரெட்டை நிறுத்த முடிவு செய்த பிறகு, அடுத்த ஒரு வேலையையும் நாம் செய்தே ஆக வேண்டும். அதுதான் உடற்பயிற்சி, சிகரெட் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை  அறவே ஒழிக்க இந்த உடற்பயிற்சி உதவும்.

வெற்றியாளர்களைப் பற்றி அறியலாம்

சிகரெட்டுக்கு அடிமையாகி அதில் இருந்து மீண்டு வந்தவர்களின் அனுபவங்களை படிக்கலாம். இது உங்களுக்கு நிச்சயம் ஒரு உந்துதலை ஏற்படுத்தும்.

நல்ல நண்பர்களுக்கு சொல்லுங்கள்

நீங்கள் சிகரெட் பிடிப்பதை நிறுத்த முடிவு செய்திருப்பதை உங்களுக்குத் தெரிந்த நண்பர்கள் மற்றும் உங்களுடன் இருக்கும் உறவுகளிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். அவர்கள் உங்களுக்கு உற்சாகமூட்டி அதற்கு உதவியும் செய்வார்கள். மேலும், சிலரும் உங்களோடு சிகரெட் பிடிப்பதை நிறுத்த முயற்சி செய்யலாம்.

சிகரெட் பணத்தை சேமியுங்கள்

சிகரெட் வாங்க வேண்டும் என்று நினைக்கும் போதெல்லாம், அதற்கான காசை எடுத்து ஒரு பெட்டியில் போட்டு வையுங்கள். அந்த பணம் சேர்ந்து கொண்டிருக்கும் போது, அதனை அதிகரிக்க வேண்டும் என்ற எண்ணம், உங்களை சிகரெட் வாங்குவதில் இருந்து தடுக்கலாம். அந்த பணத்தை ஏதேனும் இல்லத்துக்குக் கொடுத்து உதவி செய்யுங்கள்.

தூர வீசுங்கள்

சிகரெட் பிடிப்பதை நிறுத்தியதும், அதனை நினைவு கூறும் பொருட்களை தூக்கி எறியுங்கள். உங்களிடம் உள்ள ஆஷ் ட்ரே, லைட்டர் போன்றவற்றை சந்தோஷமாக தூக்கி எறியுங்கள்.

வெகு நாட்களாக வாங்க நினைத்ததை வாங்குங்கள்

சிகரெட் பிடிப்பதை நிறுத்தி ஒரு வாரம் அல்லது ஒரு மாதம் ஆன பிறகு உங்களுக்கு நீங்களே பரிசளித்துக் கொள்ளுங்கள். வெகு நாட்களாக வாங்க நினைத்து வாங்காமல் இருந்த பொருளை வாங்குங்கள். அவ்வப்போது அதற்காக பெருமையும், சந்தோஷமும் அடைவீர்கள்.

மருத்துவரை நாடலாம்

சிகரெட் பழக்கத்தில் இருந்து விடுபட தற்போது ஏராளமான மருந்துகள் வந்துவிட்டன. மருத்துவரின் உதவியோடு மருந்துகளையும் எடுத்துக் கொள்ளலாம். மருத்துவ ஆலோசனை பெறாமல் அதைச் செய்ய வேண்டாம்.

குடிப்பழக்கதை கைவிடுங்கள்

பலருக்கும் குடிப்பழக்கம் தான் பல்வேறு கெட்ட பழக்க வழக்கங்களுக்கு காரணமாக இருக்கும். எனவே, சிகரெட் பழக்கத்தை கைவிட நினைப்பவர்கள், குடிப்பழக்கம் இருந்தால், அதையும் விட்டுவிடுங்கள்.

ஆரோக்கியமான வாழ்க்கையை அனுபவித்துப் பாருங்கள்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget