மொசில்லா மொபைல் இயங்குதளத்தின் சிறப்புகள்

மொசில்லா பையர்பாக்ஸ் என்ற பெயர் இன்டர்நெட் பயன்படுத்தும் அனைவருக்கும் நன்றாக தெரியும். ஏன்னென்றால் மொசில்லா பிரௌசர் மக்கிளிடத்தில் அந்த அளவுக்கு பிரபலம். இப்பொழுது மொசில்லா நிறுவனம் மொபைல் உலகில் களமிறங்கியுள்ளது. ஆம், மொசில்லா தனது புதிய மொபைல் ஓஎஸ்யை உருவாக்கியுள்ளது. 

மொசில்லா மொபைல் ஓஎஸ் ஓபன் சோர்ஸ் ஓஎஸ் ஆகும். ZTE மற்றும் ஆல்காடெல் மொபைல் நிறுவனங்களுடன் இணைந்து மொசில்லா மொபைல் ஓஎஸ் ஸ்மார்ட்போன் உலகில் வந்துள்ளது.

விரைவில் இந்த மொபைல்கள் இந்தியாவில் வெளிவரும் என்று தெரிகறது. மொசில்லா மொபைல் ஓஎஸ் உடன் வந்துள்ள ZTE மற்றும் ஆல்காடெல் ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்களை பார்ப்போம். 

ZTE ஓபன் 
3.5இன்ஞ் டச் ஸ்கிரீன் 
512எம்பி ரோம்(ROM) 
1 GHz பிராசஸர் 
3.2 மெகாபிக்சல் கேமரா 
256எம்பி ராம்(RAM) 
4ஜிபி மெமரி கார்டு 
எப்எம் ரேடியோ 

இதன் விலை 5,000-5,500 வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஆல்காடெல் ஒன் டச் பையர் 

3.5இன்ஞ் டச் ஸ்கிரீன் 

1 GHz பிராசஸர் 
256எம்பி ராம்(RAM) 
512எம்பி மெமரி 
2ஜிபி மெமரி கார்டு 
32ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி 
3.5mm ஆடியோ ஜாக், புளுடூத் 
1400 mAh பேட்டரி 

ஆன்டிராய்ட், ஆப்பிள் ஐஓஎஸ், வின்டோஸ் போன் 8 ஓஎஸ் களுக்கு போட்டியாக மொசில்லா பையர்பாக்ஸ் மொபைல் ஓஎஸ் வந்துள்ளது. 

புதிய மொசில்லா பையர்பாக்ஸ் மொபைல் ஓஎஸ்ன் சிறப்புகளை காணலாம்.

மொசில்லா பையர்பாக்ஸ் மொபைல் ஓஎஸ் ஸ்மார்ட்போன்கள் முழுவதுமாக வெப் டெக்னாலஜி கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

மொசில்லா பையர்பாக்ஸ் மொபைல் ஓஎஸ் ல் மெசெஜ், கால், இ-மெயில், கேமரா போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளன.

பேஸ்புக், டிவிட்டர் போன்றவைகள் பையர்பாக்ஸ் மொபைல் ஓஎஸ் ல் உள்ளது.

பையர்பாக்ஸ் மொபைல் ஓஎஸ் ல் வலது பக்கம் சுவைப் செய்து உங்களுக்கு தேவையான தகவல்களை தேடிக்கொள்ளலாம்.

மியுசிக், மீடியா, ஆடியோ, பிஸ்னஸ், நியுஸ் போன்ற சேவைகளும் இதில் உள்ளன.

ZTE, ஆல்காடெல் மட்டும் அல்லாமல் எல்ஜி, ஹூவாய், சோனி போன்ற ஸ்மார்ட்போன்களிலும் பையர்பாக்ஸ் மொபைல் ஓஎஸ் வரப்போகிறது.

பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget