கே.வி.ஆனந்த் இயக்கதில் சூர்யா, காஜல் அகர்வால் நடித்துக் கொண்டிருக்கும் படம் மாற்றான். சூர்யாவின் படங்களிலேயே மாற்றான் புதிய இடத்தை பிடிக்கும் என்பது படக்குழுவினரின் நம்பிக்கை. சூர்யா இந்த படத்தில் காப்பவன், அழிப்பவன் என இரு முகங்களில் நடிக்கிறார். இந்த படத்தில் சூர்யாவின் செயல்கள் அனைத்தும் பிரம்மிக்கும் விதத்தில் இருக்கும் எனவும், ஹாலிவுட் ஹீரோக்கள் செய்ய அஞ்சும் சாகசங்களை எல்லாம் செய்கிறார்
என்றும் கூறுகின்றனர். இதற்காகத் தான் “ஸ்டான் வின்ஸ்டன் ஸ்டூடியோஸை” இயக்குனர் தேர்ந்தெடுத்தார் போல.
கிளைமேக்ஸ் காட்சி ரசிகர்கள் ஆச்சரியப்படும் விதத்தில் இருக்குமாம். பாகிச்தான் பார்டரில் படப்பிடிப்பைத் தொடங்கிய மாற்றான் படக்குழு ரஷியாவில் சில முக்கிய காட்சிகளை படாமாக்கியது. இப்போது அமெரிக்கா செல்ல ரெடியாகிறதாம் படக்குழு. ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மெண்ட்ஸ் தயாரிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.