வேற்று கிரக வாசிகள் வருவார்களா?


வேற்று கிரக வாசிகள் பற்றிய சுவாரஸ்ய தகவல்களை அமெரிக்க ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் போர்ட் மையர்ஸ் நகரில் உள்ள புளோரிடா கல்ஃப் கோஸ்ட் பல்கலைக்கழகத்தின் கணிதவியல் பேராசிரியர் தாமஸ் ஹேர். இவர் கணக்குகளின் அடிப்படையில்
வேற்று கிரக வாசிகள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டார். இதில் தெரியவந்த தகவல்கள் பற்றி அவர் கூறியதாவது:
நம் சூரிய குடும்பம் மற்றும் அதை சார்ந்த கோள்கள், விண்கற்கள் போல இன்னும் எத்தனையோ சூரியன்கள், நட்சத்திரங்கள் இருக்கின்றன. 


நமக்கு அருகிலோ, வெகு தொலைவிலோ நம்மை போலவே ஒரு கூட்டம் உயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறும் இருக்கிறது. ஆனால், அவர்கள் உணவு சாப்பிட்டு, தண்ணீர் குடித்து நம்மை போலவே இருப்பார்களா என்பது சந்தேகம். அவர்கள் வேறு மாதிரியாக இருக்கவும் வாய்ப்பு உள்ளது.
ஒருவேளை, அப்படி யாராவது எங்காவது இருந்தால் நம்மை கண்டுபிடிப்பதும் சிரமம் அல்ல. அவர்களது இடத்தில் இருந்து பயணிக்க தொடங்கியிருந்தால் 500 ஆண்டுகளிலேயே நம்மை அடைந்திருக்கலாம். 


அதுபோன்ற சம்பவம் இதுவரை நடக்கவில்லை. அதனால், அனேகமாக அதுபோல யாரும் இல்லாமல் இருக்கலாம். அல்லது, நம்மை கவனிக்காமல் அவர்கள் கடந்துபோயிருக்கலாம். அல்லது, எங்கும் பயணப்படாமல் அவர்கள் தங்கள் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டிருப்பவர்களாகக்கூட இருக்கலாம். மேலும், வேற்று கிரக வாசிகள் இருந்தால் அவர்களை பார்த்து பயப்படவும் அவசியம் இல்லை. அவர்கள் எல்லா வளங்களும் நிறைந்தவர்களாகத்தான் இருப்பார்கள். பூமியில் இருந்து தண்ணீரோ, வேறு எதுவுமோ அவர்கள் எதிர்பார்க்கப் போவதும் இல்லை.இவ்வாறு தாமஸ் ஹேர் கூறியுள்ளார்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget