உசாரய்யா உசாரு மொபைல் நம்பர் உசாரு!!


2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் 122 லைசென்ஸ்களை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு 'மொபைல் நம்பர் போர்ட்டபிலிட்டி' எனப்படும் தொலைபேசி எண்ணை மாற்றாமல் விரும்பிய நிறுவனத்தின் சேவைக்கு மாறும் திட்டத்துக்கு பெரும் சிக்கல் உருவாகும் என்று தெரிகிறது.

மேலும் லைசென்ஸ் விற்பனைக்கு புதிய விதிமுறைகளை டிராய் வகுக்க வேண்டும் என்றும், அதன் அடிப்படையில் மீண்டும் லைசென்ஸ் விற்கப்பட வேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் லைசென்ஸ்கள் பெரும் கட்டணத்துக்கு ஏலம் போகப் போவது நிச்சயமாகிவிட்டது.


அதிக விலை கொடுத்து லைசென்ஸ்களை வாங்கும் தொலைத் தொடர்பு நிறுவனங்கள், அந்த விலையை நிச்சயமாக வாடிக்கையாளர்கள் மீது தான் சுமத்தும். இதனால் தொலைபேசிக் கட்டணங்களும் நிச்சயம் விண்ணை நோக்கி செல்லப் போகின்றன.


இப்போது ரத்து செய்யப்பட்டுள்ள 122 லைசென்ஸ்கள் விவரம்:


டாடா டெலிகாம் (அஸ்ஸாம், ஜம்மு காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள்) 3 லைசென்ஸ்கள்


வீடியோகான் (பஞ்சாப் தவிர்த்த அனைத்து மாநிலங்கள்) 21 லைசென்ஸ்கள்


ஐடியா செல்லுலார் (மேற்கு வங்கம், கொல்கத்தா, வடகிழக்கு மாநிலங்கள், ஒடிஸ்ஸா, பஞ்சாப், அஸ்ஸாம், ஜம்மு காஷ்மீர், கர்நாடகம், தமிழ்நாடு மாநிலங்கள்) 9 லைசென்ஸ்கள்


யூனிடெக் (இந்தியா முழுவதும்) 22 லைசென்ஸ்கள்


லூப் டெலிகாம் (மும்பை தவிர்த்த அனைத்து நகரங்கள்) 21 லைசென்ஸ்கள்


சிஸ்டெமா (ராஜஸ்தான் தவிர்த்த பிற மாநிலங்கள்) 21 லைசென்ஸ்கள்


ஸ்பைஸ் டெலிகாம் (ஆந்திரப் பிரதேசம், டெல்லி, ஹரியாணா, மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்கள்) 4 லைசென்ஸ்கள்


எடிசலாட் டிபி (பிகார், மத்தியப் பிரதேசம், ஆந்திரா, பஞ்சாப், தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம் கிழக்கு, உத்தரப் பிரதேசம் மேற்கு, டெல்லி, குஜராத், ஹரியாணா, கர்நாடகம், கேரளம், ராஜஸ்தான், மும்பை, மகாராஷ்டிரம்) 15 லைசென்ஸ்கள்


எஸ்-டெல் (ஒடிஸ்ஸா, இமாசலப் பிரதேசம், அஸ்ஸாம், வடகிழக்கு மாநிலங்கள், பிகார், ஜம்மு காஷ்மீர்) 6 லைசென்ஸ்கள்


இவ்வாறு ரத்தான 122 லைசென்ஸ்கள் மூலமாக இப்போது வழங்கப்பட்டு வரும் தொலைபேசி சேவை நாட்டின் ஒட்டுமொத்த செல்போன் தொலைபேசி சேவையில் 5 சதவீதமாகும். அதாவது நாட்டின் 5 சதவீத செல்போன் சேவைகள் விரைவில் பாதிக்கப்படப் போகின்றன.


டிராய் விதிகளின்படி, இந்த 5 சதவீத வாடிக்கையாளர்களில் யார் யார் அந்த சேவையைப் பெற்று 90 நாட்களைக் கடந்துவிட்டார்களோ அவர்கள் 'மொபைல் நம்பர் போர்ட்டபிலிட்டி' மூலம் எண்ணை மாற்றாமல் வேறு நிறுவனத்தின் சேவைக்கு மாறிவிட முடியும்.


ஆனால், சேவையைப் பெற்று 90 நாட்களுக்கு உள்ளான வாடிக்கையாளர்கள் 'மொபைல் நம்பர் போர்ட்டபிலிட்டி' வசதியை பயன்படுத்த முடியாது.


மேலும் எந்தெந்த வாடிக்கையாளர்கள் பாதிக்ப்படுவர் என்பதை தொலைபேசி நிறுவனங்கள் தெரிவிக்க வேண்டும். நாம் பயன்படுத்தும் செல்போன் எண், ரத்து செய்யப்பட்ட லைசென்ஸ் அலைவரிசைக்குள் வருகிறதா இல்லையா என்பதை நாம் கண்டறிய முடியாது. இதை நமக்குச் சொல்ல வேண்டியது தொலைபேசி நிறுவனங்கள் தான். அதை அவர்கள் உரிய நேரத்தில் சொன்னால் தான் நாம் 'மொபைல் நம்பர் போர்ட்டபிலிட்டி' மூலம் தப்ப முடியுமா என்பதை அறிய முடியும்.


இல்லாவிட்டால், நமது செல்போன் ஒருநாள் வேலை செய்யாமல் போகும். இனி, இந்த சேவை கிடையாது 'ஸாரி' என்ற ஆட்டோமேடிக் சிஸ்டம் மூலம் பதில் வரும். இதையடுத்து அந்த செல்போன் நிறுவனத்தின் கஸ்டமர் சர்வீஸ் நம்பருக்கு போன் செய்து சண்டை போட்டுவிட்டு, நாம் வேறு நிறுவனத்தின் சிம் கார்டை போட்டுக் கொண்டு, புதிய நம்பருடன் அலைய வேண்டிய நிலை வரலாம்.
   
உடனடியாக பணம் பார்க்க ஆசைப்பட்டு தொலைபேசி சேவையே தெரியாத பல நிறுவனங்கள் ராசாவை 'கவனித்து' ஸ்பெக்ட்ரத்தை வாங்கின. இதில் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், காய்கறி விற்கும் நிறுவனங்களும் அடக்கம். இவர்களது லைசென்ஸ்கள் எல்லாம் ரத்தாகிவிட்ட நிலையில், விட்டால் போதும் என்று ஓடப் போவது நிச்சயம். இதனால், இந்தத் துறையில் 'மூழ்கி முத்தெடுத்த' டாடா டோகோமோ, ஐடியா செல்லுார், யூனிநார் போன்ற பெரிய நிறுவனங்கள் தான் மீண்டும் லைசென்ஸ்கள் வாங்கும் போட்டியில் இறங்கும்.


இவர்களும் பாரதி ஏர்டெல், வோடபோன் போன்ற லைசென்ஸ் ரத்தால் பாதிக்கப்படாத பெரு நிறுவனங்களும் தான் மிஞ்சியிருப்பர். லூப் டெலிகாம், வீடியோகான், எஸ்-டெல் போன்ற தொலைத் தொடர்புத்துறையில் சிறிய நிறுவனங்கள் இந்தத் தொழிலில் இருந்தே 'ஜகா' வாங்கலாம் என்று கருதப்படும் நிலையில், போட்டியும் குறையும் என்பதால், இந்த பெரிய நிறுவனங்கள் கட்டணத்தை நினைத்த நேரத்தில் ஏற்றுவார்கள் என்பதும் நிச்சயம்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget