தமிழ் சினிமாவிற்கு ராஜபாட்டை படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானவர் தீக்ஷா செத். ராஜபாட்டை படம் சரியாக ஓடாததால் அடுத்த படத்தை தேர்வு செய்வதில் கவனமாக இருந்த தீக்ஷா செத், அதற்க்கான கதைகளை கேட்டுக் கொண்டிருக்கும் போது யாரோ ஒருவர் “யார் கூட வேணும்னாலும் நடிங்கம்மா, சிம்பு தம்பி கிட்ட இருந்து மட்டும் விலகி இருங்கம்மா” என்று கூறினாராம்.
தீக்ஷா செத் தனது நட்பு வட்டாரத்தில் இதை பற்றி பேசும்போது “நான் சிம்புவின் ரசிகை. என்னிடம் அவருடன் நடிக்க வேண்டாம் என்று கூறினால் எப்படி. சிம்பு எப்போது கேட்டாலும் கால்ஷீட் கொடுக்க நான் தயார்” என்று கூறினாராம்.
இதை கேட்ட சிம்புவின் விசுவாசி அப்படியே வார்த்தை மாறாமல் சிம்புவிடம் சொல்ல சிம்பு எடுத்த முடிவின் விளைவு தான், சிம்பு நடிக்கும் வேட்டை மன்னன் படத்தின் ஹீரோயினாக தீக்ஷா செத் தேர்ந்தெடுக்கப்பட்டது. தீக்ஷா தான் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்று சிம்பு ஒரே காலில் நின்றாராம். அதன் பின் "யார் என்னை பற்றி இந்த மாதிரி தவறான செய்திகளை பரப்புவது" என சிம்பு தீக்ஷாவிடம் கேட்ட கேள்விக்கு “ என்ன பாத்தா வழிப்பறி பண்றவன் மாதிரியா இருக்கு” எனும் ஒஸ்தி பட டையலாக் தான் நினைவிற்கு வருகிறது.