ரஜினி, விக்ரம் என்று முன்னணி ஹீரோக்களுடன் நடித்தவர் ஸ்ரேயா. என்றாலும் நீண்டகாலம் அவரால் கோடம்பாக்கத்தில் கோலேச்ச முடியவில்லை. அதனால் தற்போது வளர்ந்து வரும் நடிகர்களின் படங்கள் சிலவற்றை கைப்பற்றி நடித்து வருகிறார். அதில் கன்னடத்தில் உருவாகும் சந்திரா படம் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் மகாராணி வேடத்தில் நடிக்கிறார் ஸ்ரேயா. அதனால் அந்த காலத்து ராணிகள் போன்று வாள் சண்டையெல்லாம் போடுகிறார். அதற்காக சில மாதங்கள் கடினமாக உழைத்திருக்கிறாராம்.
மேலும், பாடல் காட்சிகளில் அந்த காலத்து காஸ்டியூம்களை அணிந்து தத்ரூபமாக நடித்துள்ளாராம். அதில் ஒரு பாடல் முழுக்க படுகவர்ச்சியாக தோன்றியுள்ள ஸ்ரேயா, ஜாக்கெட் அணியாமலேயே நடித்துள்ளாராம். கதையோட்டத்தோடு பார்க்கும்போது அந்த காட்சியில் ஆபாசம் தெரியாது என்றபோதும், சென்சார்போர்டு சட்டப்படி அது சர்ச்சைக்குரிய காட்சி என்கிறார்கள். அந்த அளவுக்கு அரை நிர்வாண கோணத்தில் ஹீரோவோடு கட்டிகலந்திருக்கிறாராம் ஸ்ரேயா. ஆனால் இதுபற்றி ஸ்ரேயா கூறுகையில், மிட்நைட் சில்ரன்ஸ் படத்தில் இதைவிட கவர்ச்சியாக நடித்திருக்கிறேன். அதனால் இதெல்லாம் ஒரு கவர்ச்சியே அல்ல என்று அசால்டாக சொல்கிறார்.