என்றென்றும் புன்னகை படத்தில் ஆடைய துறந்த ஆன்ட்ரியா!

‘என்றென்றும் புன்னகை' படத்தில் நடிகை ஆன்ட்ரியா ஓவியக் கல்லூரி மாணவர்களுக்கு நிர்வாண போஸ் கொடுத்து நடித்திருக்கிறாராம். படமோ, நிகழ்ச்சியோ எதில் பங்கேற்றாலும் பரபரப்பை பற்ற வைத்துவிடுவார் ஆன்ட்ரியா. அனிருத்துடனான இவருடைய முத்தக் காட்சி இணைய உலகில் பிரபலம். விரைவில் வெளியாக உள்ள விஸ்வரூபம் படத்தில் கவர்ச்சி, கமலுடன் முத்தக்காட்சி என்று அமர்க்களப்படுத்தியிருக்கிறாராம். அதையடுத்து இப்போது என்றென்றும் புன்னகை படத்தில் மாடல் அழகியாக நடிக்கிறார். இயக்குநர் வாமனன்
இயக்கியுள்ள என்றென்றும் புன்னகை படத்தில் ஜெயம்ரவி, ஜீவா, வினய், திரீஷா ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் ஆன்ட்ரியாவும் மாடல் கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம்.
அழகாய் உடுத்தி கேட்வாக் செய்யும் மாடல் இல்லை. ஓவியக் கல்லூரி மாணவர்களுக்கு போஸ் கொடுக்கும் மாடலாம். இதில்தான் அதிரடியாக நிர்வாணமாக போஸ் கொடுத்து அசத்தியிருக்கிறாராம்.
இது பற்றி ஆன்ட்ரியா கருத்து கூற மறுத்துவிட்டார். எனினும் கதபாத்திரம் பற்றி இப்போதே நான் சொல்லிவிட்டால் அதன்மீதுள்ள சுவராஸ்யமும், எதிர்பார்ப்பும் குறைந்து விடும் என்று கூறியுள்ளார். இந்த மாதிரியான கதாபாத்திரம் என் நடிப்புத் திறமையை வெளிப்படுத்த உதவுகிறது என்று கூறிய ஆன்ட்ரியா, படம் வந்த பிறகு பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் என்று போல்டாக தெரிவித்துள்ளார்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget