எளிமையாக பழகுவது, ஆன்மீகம் படிப்பது என்று ஏற்கனவே ரஜினி வழியில் சென்று கொண்டிருக்கிறார் அஜீத். பாராட்டுவதிலும் ரஜினிதான் இவருக்கு ரோல் மாடல். நல்ல படம் எதுவாக இருந்தாலும் அதனைப் பார்த்து உடனடியாக சம்பந்தப்பட்டவர்களை வாழ்த்துவது ரஜினியின் பழக்கம். நான் ஈ படத்தைப் பார்த்ததும் படத்தின் இயக்குனர் ராஜமௌலியையும், வில்லனாக நடித்த சுதீப்பையும் மனதார பாராட்டினார். அதேபோல் துப்பாக்கி படத்தை இருமுறை பார்த்து முருகதாஸையும், விஜய்யையும் பாராட்டினார்.
அவர் வழியில் இப்போது அஜீத்.
துப்பாக்கி படத்தை பார்த்த அஜீத் உடனடியாக விஜய்யை தொடர்பு கொண்டு படம் பார்த்தேன் சும்மா கலக்கீட்டீங்க என்று பாராட்டியிருக்கிறார். அதேபோல் முருகதாஸை தொடர்பு கொண்டு தனது பாராட்டையும், வாழ்த்தையும் தெரிவித்துள்ளார்.
அஜீத்தை வைத்து படம் இயக்க எப்போதும் தயாராக இருக்கிறேன் என்று முருகதாஸ் ஏற்கனவே தெரிவித்திருந்தார். அதற்கு இதுவரை அஜீத் பதிலெதுவும் சொல்லவில்லை. இந்தப் பாராட்டுக்குப் பிறகு அஜீத், முருகதாஸ் இணைய வாய்ப்பு உருவாகுமா என அனைத்துத் தரப்பினரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.