சந்தானம் முதன்முதலாக தயாரிப்பாளராக உருவெடுத்துள்ள படம் கண்ணா லட்டு தின்ன ஆசையா. இப்படத்தில் சந்தானம், சேது, பவர் ஸ்டார் என மூன்று பேர் நாயகர்களாக நடித்துள்ளனர். இவர்கள் மூன்று பேரும் ஒரு பெண்ணை காதலிப்பதுதான் கதையாம். இதில் நாயகியாக விஷாகா சிங் நடித்துள்ளார். கதைப்படி இவர்தான் லட்டாம். அதிலும் சந்தானம், சேதுவை விட பவர் ஸ்டார்தான் விஷாகாவுடன் அதிகமாக ஒட்டி உரசியபடி நடித்திருக்கிறாராம்.
என்றாலும் நடிகையோ, படப்பிடிப்பு தவிர மற்ற நேரங்களில் பவர் ஸ்டார் தன்னருகே வந்து நின்றாலே இடத்தை காலி பண்ணி விடுவாராம். அந்த அளவுக்கு அவரது ஜொள் பேச்சு அம்மணியை வெறுப்பேற்றியதாம்.
இருப்பினும் விஷாகாவை விடுவதாக இல்லை பவர் ஸ்டார்.
அடுத்தபடியாக ஒரு படத்தில் தன்னுடன் டூயட் பாட வேண்டும் என்று நச்சரித்து வருகிறாராம். ஆனால் மூத்த நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தால் அதன்பிறகு என்னுடன் இளவட்ட நடிகர்கள் நடிக்க மாட்டார்கள் என்று தட்டிக்கழித்து வருகிறாராம் நடிகை. ஆனாலும் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் என்னை வெறுத்த விஷாகா, இன்னொரு படத்தில் என்னை விரும்புவதுபோல் நடிக்கால் அவரை விட மாட்டேன் என்று துரத்தி வருகிறார் பவர். அதோடு தன்னுடன் மீணடும் நடிப்பதற்கு நடிகையிடம் பேசுமாறு சந்தானத்தையும் கேட்டுக்கொண்டு வருகிறாராம் நடிகர்.