கோலிவுட் பாக்ஸ் ஆஃபிஸில் சகுனி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. முதல் பத்து தினங்களில் ஐந்து கோடி வசூலை தாண்டியுள்ளது முக்கியமானது. இந்தப் படம் வெளியான முதல் வார இறுதியில் 2.27 கோடியை வசூலித்தது. இந்த வசூல் இரண்டாவது வார இறுதியில் கணிசமாக குறைந்துள்ளது. அதாவது இரண்டாவது வார இறுதியில் இதன் வசூல் 1.36 கோடி. வார நாட்களில் இதன்
வசூல் 1.62 கோடி. வசூல் கணிசமாகக் குறைந்தாலும் சென்னையை பொறுத்தவரை சூப்பர் கலெக்சன். முதல் பத்து தினங்களில் இப்படம் 5.25 கோடிகளை வசூலித்துள்ளது. டப்பா படமே இப்படியென்றால், படம் நன்றாக இருந்திருந்தால்...?
பாக்ஸ் ஆஃபிஸில் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் மனம் கொத்திப் பறவை உள்ளது. இதுவரை இப்படம் ஒன்றரை கோடி ரூபாய் சென்னையில் வசூல் செய்துள்ளது.