தடாலடியாக கட்டணத்தை குறைத்த டாடா டோக்கோமோ!

தொலை தொடர்பு சேவை நிறுவனமான டாடா டோக்கோமோ தனது வையர்லெஸ் இன்டர்நெட் சேவைக்கு 60% சதவிகிதம் கட்டண குறைப்பு செய்கிறது. டாடா டோக்கோமோ நிறுவனத்தின் இந்த கட்டண குறைப்பு பற்றிய முழு விவரத்தினையும் பார்கலாம். முதலில் ரூ.650 கட்டணம் செலுத்தினால் 1 ஜிபி வரை இன்டர்நெட் சேவையினை பயன்படுத்தி கொள்ளலாம்
என்று இருந்தது.
இப்போது 1 ஜிபி-யின் விலையை ரூ. 250-தாக குறைத்துள்ளது. இதை ஆரம்ப கட்ட சலுகையாக அறிவிக்கிறது டாடா டோக்கோமோ. ரூ. 750-க்கு 2 ஜிபி வரை பயன்படுத்தலாம் என்று இருந்ததை இப்போது ரூ. 450-க்கு கட்டண குறைப்பு செய்துள்ளது.
அதே போல் போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கும் புதிய சலுகைகளை வழங்குகிறது டாடா டோக்கோமோ. 1 ஜிபி வரை ரூ. 200-க்கும், 2 ஜிபி வரை ரூ. 350-க்கும் இனி இன்டர்நெட் சேவையை போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்கள் பெறலாம்.
அளவில்லா 2 ஜிபி வசதியினை ரூ.700 விலையில் ப்ரீப்பெய்டு வாடிக்கையாளர்கள் பெற முடியும். வோடாஃபோன், ஏர்டெல் என்று தொலைத்தொடர்பு சேவையை வழங்கி வருகிறது பல நிறுவனங்கள்.
போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்கள் இந்த கட்டண குறைப்பு சலுகையில், 6 ஜிபி வரை ரூ. 950 விலையிலும், அளவில்லா சேவையை 11 ஜிபி வரை ரூ. 1,200 விலையிலும் வழங்குகிறது டாடா டோக்கோமோ.
இதில் டாடா டோக்கோமோ நிறுவனம் அறிவித்திருக்கும் இந்த புதிய கட்டண குறைப்பு சலுகை வாடிக்கையாளர்களுக்கு மிக பயனளிக்க கூடிய ஒன்றாக இருக்கும்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget