ஒயிட் இண்பேடைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் படம் சுழல். ஆர். ஜெயக்குமார் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். கதாநாயகனாக பாரீசும், கதாநாயகிகளாக சாரு, ரோஸின் மற்றும் ஜோதி நடிக்கின்றனர். இவர்களுடன் ரன் பட வில்லன் அதுல் குல்கர்னி, பிரதாப்போத்தன், நிழல்கள் ரவி, காதல் சுகுமார், காவேரி, மீரா கிருஷ்ணன், மீனாள், ஆஷா கோத்தாரி நீரஜ், சாருலதா, சரிதா ஆகியோர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவை ஜேம்ஸ் கவனிக்க எல்.வி. கணேசன் இசையமைக்கிறார்.
இப்படத்தில் வரும் ஆடும் அலை மேலே ஓடும் கப்பல் போலு இது வாழக்கை பயணம் தானே என்ற பாடலுக்க மும்பை அழகி ஆஷா கோத்தாரி நடனம் ஆடியுள்ளார். பாண்டிச்சேரி, மூணாறு, உடுமலைப்பேட்டை, வாகமன், கொச்சின் ஆகிய பகுதியில் படப்பிடிப்பு நடைபெற்று விரைவில் வெளிவரவிருக்கிறது.
நாட்டின் பொருளாதாரம், வளர்ச்சி, சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்க சர்வதேச தீவிரவாத கும்பல் ஊடுருவுகிறது, அவர்களை அழித்து நாட்டை பாதுகாப்பதே கதை.