இந்த வெள்ளிக்கிழமை வெளியாகவிருக்கும் படங்கள் எத்தனை தெரியுமா.. ஐந்து! இவற்றில் எத்தனை தேறும் என்ற கேள்வி... அதேநேரம் ஓரிரு படங்கள் தேறினாலும் அது தமிழ் சினிமாவுக்கு சற்றே ஆறுதலளிப்பதாக இருக்கும். இந்த ஐந்து படங்களில் ஓரளவு பெரிய படம் எப்படி மனசுக்குள் வந்தாய்?. காதலில் விழுந்தேன் படம் தந்த இயக்குநர் பிரசாத்தின் அடுத்த படம். அதே போல காதல் த்ரில்லர். பார்க்கக் கூடிய அளவுக்கு வந்திருப்பதாக சொல்கிறார்கள்.
அடுத்தது பனித்துளி. நட்டி குமார் என்பவர் இயக்கியுள்ளார். இதுவும் த்ரில்லர் வகைதான்.
லிவிங்ஸ்டன் போன்றோர் நடித்துள்ள 3 டி படம் அதிசய உலகமும், புதுமுகங்கள் நடிப்பில் பாளையம் கோட்டை என்ற படமும் இன்று ரிலீசாகின்றன. ஸ்ரீராமகிருஷ்ண தரிசனம் என்ற பக்திப்படமும் இன்றய ரிலீஸ் லிஸ்டில் உண்டு!
இந்த தமிழ்ப் படங்கள் தவிர, மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தியிலிருந்து மூன்று டப்பிங் படங்களும் வெளியாகின்றன. அவை.. அடங்காதவள், தில் தில் மனதில், கொருக்குப் பேட்டை கூலி (தமிழ் இயக்குநர்கள் தோற்றார்கள் போங்க!)
அல்லு அர்ஜுனின் ஜூலாயி படம் நேரடியாக தெலுங்கிலேயே வெளியாகிறது. சென்னை மற்றும் என்எஸ்ஸியில் 30 அரங்குகள் இந்தப் படத்துக்கு தரப்பட்டுள்ளன.
கேங்ஸ் ஆப் வஸிப்பூர் 2 என்ற இந்திப் படமும், தி பார்ன் லெகஸி எனும் ஆங்கிலப் படமும் இன்று பெரிய அளவில் வெளியாகின்றன.
ஆக மொத்தம் இன்று 11 புதிய படங்கள் வெளியாகின்றன. என்ஜாய்!