பெரும் பரபரப்பாக பேசப்பட்ட ஜிஸ்ம் 2 படம் ஊத்திக் கொண்டு விட்டதாம். அப்படத்தை பெரும் தோல்விப் படமாக்கிய பெருமை நாயகியாக நடித்த கனடா நாட்டு ஆபாசப் பட நடிகை சன்னி லியோனுக்கே போய்ச் சேர வேண்டும் என்று ரசிகர்களும், திரைப்பட விமர்சகர்களும் கூறுகிறார்கள். பிபாஷா பாசுவின் நடிப்பில் வெளியான ஜிஸ்ம் படத்தின் நிழலைக் கூட இந்தப் படம் தொட முடியாது என்றும் இந்தித் திரை ரசிகர்கள் கூறுகிறார்கள். படத்தைப் பார்த்து விட்டு வெளியே வருகிறவர்கள் எல்லாம் கொலை
வெறியுடன் வருவதைப் பார்த்து பாலிவுட்டே பயந்து போயிருக்கிறதாம். அந்த அளவுக்கு படம் படு குப்பையாக இருக்கிறதாம்.
பூஜா பட்டின் குடும்ப் படம்தான் இந்த ஜிஸ்ம் 2. இப்படத்தில் சன்னி லியோன் நாயகியாக, படு கவர்ச்சிகரமாக நடித்திருப்பதாக படம் தயாரிப்பில் இருந்தே ஏற்றி ஏற்றி செய்திகளை வெளியிட்டு வந்தனர். சன்னி போல வருமா என்று புகழார மாலையாக பேசி வந்தார்கள். படத்தின் தயாரிப்பாளரான டினோ மரியா ஒரு படி மேலே போய் பிபாஷாவை விட சன்னி எவ்வளவோ பெட்டர் என்றெல்லாம் புரூடா விட்டுக் கொண்டிருந்தார்.
ஆனால் படத்தை இன்று ஊற்றி மூடி விட்டார் சன்னி. படம் முழுக்க குப்பைத்தனமாக இருக்கிறதாம். வசனங்கள் படு காமெடியாக இருக்கிறது. காட்சிகளில் நேர்த்தி இல்லை. நடிகர்களிடம் ஒரு விறுவிறுப்பான நடிப்பு இல்லை. கதை புரியவில்லை. கோமாளித்தனமாக படத்தின் திரைக்கதையை அமைத்துள்ளனர். சன்னி லியோனின் மார்பை மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட படம் போல இருக்கிறது என்று கூறுகிறார்கள் திரைப்பட விமர்சகர்கள். ரசிகர்களும் கூட படத்தைப் பார்த்து கடுப்பாகியுள்ளனராம்.
சன்னி லியோனுக்கு நடிக்கவே தெரியவில்லை. உடலைக் காட்டுகிற அக்கறையைக் கூட அவர் நடிப்புக்குத் தரவில்லை. மார்பை மட்டும் காட்டினால் போதுமா, நடிப்பையும் கூட சேர்த்துத் தர வேண்டாமா என்று விமர்சிக்கிறார்கள். கவர்ச்சிக் காட்சிகளிலும் கூட உணர்ச்சிகரமாக அவர் நடிக்கவில்லை என்று கூறும் ரசிகர்கள் படம் டோட்டல் வேஸ்ட் என்கிறார்கள்.
படத்தின் நாயகன் ஒரு தீவிரவாதி. அவனிடம் உள்ள சில முக்கிய ரகசியங்களைக் கைப்பற்ற இரண்டு உளவுத்துறை அதிகாரிகள் முயலுகிறார்கள். அதற்காக ஆபாசப் பட நடிகையான சன்னி லியோனை அணுகுகிறார்கள். சன்னியும், அந்தத் தீவிரவாதியும் முன்னாள் காதலர்கள். ஆனால் நாட்டுக்காக மீண்டும் தீவிரவாதியுடன் பழகி ரகசியங்களைக் கவர்ந்து வருமாறு கேட்கிறார்களாம் உளவுத்துறை அதிகாரிகள்.இப்படிப் போகிறது படத்தின் கதை.
ஜிஸ்ம் 2 சன்னி லியோனுக்கு பாலிவுட்டில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தும் என்று கூறி வந்தார்கள். ஆனால் பேசாமல் இவர் ஆபாசப் படங்களிலேயே தொடர்ந்து நடிக்கலாம் என்று கூறுவது போல அமைந்துள்ளது இப்படம்...