கோச்சடையான் இசை வெளியீட்டு விழாவில் தல நடிகர்!

ஜப்பானில் நடக்கவிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்கிறார் அஜீத். ஜப்பானில் முதல் முறையாக நடக்கும் இசை வெளியீட்டு விழா ரஜினியின் கோச்சடையான்தான். இந்த விழாவில் ரஜினி, தீபிகா படுகோன், சரத்குமார் என படத்தின் நட்சத்திரங்கள் அத்தனைபேரும் பங்கேற்கின்றனர்.
படத்தில் நடித்தவர்கள் மட்டுமின்றி, முக்கிய நடிகர், நடிகைகள், இயக்குநர்களும் விழாவில் பங்கேற்கக் கூடும் எனத் தெரிகிறது.
அப்படி பங்கேற்பவர்களில் முக்கியமானவர் அஜீத்குமார்!
இதற்கிடையே, கோச்சடையான் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. படத்தின் 3 டி தொழில்நுட்பப் பணிகளை கவனிக்க 'டைட்டானிக்' படத்துக்கு பணியாற்றிய 3டி தொழில்நுட்ப கலைஞர்கள் மூன்றுபேர் சென்னை வந்துள்ளனர். இரவு பகலாக வேலை நடக்கிறதாம்.
இதே போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் லண்டன் மற்றும் ஹாங்காங்கிலும் நடந்து வருகின்றன.
டிசம்பருக்குள் ரெடியாகிடுமா என்பது ரசிகர்கள் கேள்வி!

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget