மாணவர்கள் உபயோகிக்க சிறந்த விண்டோஸ் மொபைல் அப்ளிக்கேஷன்கள்!


மாணவர்களுக்கு கல்வி சம்மந்தமான விஷயங்களில் சிறப்பாக ஒத்துழைக்க வழி வகுக்கிறது விண்டோஸ் இயங்குதளம். இந்த இயங்குதளத்தில் மாணவர்களில் மூளையை சுறுசுறுப்பாக இயங்க வைக்க பல வசதிகளை பெறலாம். அந்த வசதிகளை அப்ளிக்கேஷன் வடிவில் பயன்படுத்த முடியும். ஆனால் பட்டியலிடப்பட்டிருக்கும், இந்த அப்ளிக்கேஷன்கள் நிச்சயம் படிப்பவர்களை ஆச்சர்யப்பட வைக்கும்.
மாத் டியூட்டர்:

மாத் டியூட்டர் என்ற விண்டோஸ் இயங்குதள அப்ளிக்கேஷன், மாணவர்களை கணக்கில் புலியாக மாற்றும். இந்த அப்ளிக்கேஷனின் உதவி கொண்டு சின்ன குழந்தைகளுக்கு பயிற்சி கொடுத்தால் இன்னும் சிறந்தது. சிறு வயதில் இருந்தே குழந்தைகள், நல்ல மாணவர்களாக வர வாய்ப்பிருக்கிறது. ஏனெனில் இந்த அப்ளிக்கேஷனில் கூட்டல், கழித்தல், பெருக்கல் மற்றும் வகுத்தல் போன்ற கணக்குகள் நிறைய கொடுக்கப்பட்டுள்ளது. இவையனைத்தும் குழந்தைகளையும், மாணவர்களையும் உற்சாகப்படுத்தும் வகையில் இருக்கும். மேலும் இதில் ஸ்கொயர் ரூட், ஈக்குவேஷன் போன்ற பல கணக்கு வகையறாக்கள் இருக்கும். இந்த மாத் டியூட்டர் அப்ளிக்கேஷனை விண்டோஸ் போன் மார்கெட்டில் இருந்து எளிதாக டவுன்லோட் செய்யலாம். அட! இந்த அப்ளிக்கேஷனை ஃப்ரீயாக பெறலாம்.


ப்ராக்டீஸ் இங்கிலீஷ் கிராமர்:

கணக்கிற்கு பிறகு மாணவர்கள் அதிகம் கவலை கொள்கிற விஷயம் கிராமர். பலரையும் பயந்து ஓட வைப்பது இந்த கிராமர் க்ளாஸ். அதிலும் மத்தியான வகுப்பில் கிராமர் என்றால் கேட்கவே வேண்டாம். ஆனால் தொழில் நுட்ப வசதிகள் பெருகி வருவதால், இது போன்ற கிராமர் விஷயங்களுக்கு பயப்பட வேண்டியதே இல்லை. ப்ராக்டீஸ் இங்கிலீஷ் கிராமர் என்ற அப்ளிக்கேஷனை விண்டோஸ் இயங்குதளம் கொண்ட எலக்ட்ரானிக் சாதனங்களில் இருந்து டவுன்லோட் செய்யலாம். இதன் மூலம் அட்வெர்ப், வெர்ப், நவுன் போன்ற ஆங்கில இலக்கணங்களை அடிப்படையில் இருந்து கற்று கொள்ளலாம். இது மாணவர்களுக்கு மட்டும் தான் என்றல்ல. இன்று வேலை நிமித்தமாக நிறைய உரையாடல்கள் ஆங்கிலத்தில் நிகழ்த்த வேண்டி இருக்கிறது. இதில் இன்றளவும் பல பேர்கள் பயன்படுத்தும் ஆங்கிலத்தில் பல தவறுகள் இருக்கத்தான் செய்கிறது. இன்னும் சொல்லப்போனால், தினமும் பயன்படுத்தும் சில சாதாரண ஆங்கில சொல்லுக்கு, சிலரால் ஒரு வார்த்தையில் சரியான விளக்கத்தினை கொடுக்க முடிவதில்லை.
இதற்கெல்லாம் ஆங்கில அடிப்படை இலக்கணம் சரியாக இருந்தால் போதும். தேவையான தகவல்களை, பல புத்தகங்களை படித்து தெரிந்து கொள்ள முடியும். இப்படி ஆங்கில இலக்கணத்தை அடிப்படையில் இருந்து ஆராய ப்ரேக்ட்டீஸ் கிராமர் என்ற விண்டோஸ் போன் அப்ளிக்கேஷன் சிறப்பாக உதவும். இந்த அப்ளிக்கேஷனை டவுன்லோட்
செய்ய வேண்டும் என்றால் விலை பற்றியெல்லாம் யோசிக்க வேண்டியதில்லை. ஏனென்றால் இந்த அப்ளிக்கேஷன் ஃப்ரீ தான்.


திஸ் டே இன் ஹிஸ்டரி:

இன்று அதிகமாக பயன்படுத்தப்பட்டு வரும் பெரிய சொல் ‘அப்டேஷன்’. எந்த ஒரு செய்தியாக இருப்பினும் சரி, அந்த தகவல்களை பற்றிய முழு அப்டேஷன் இருப்பது அவசியம். அதிலும் வரலாறு சம்மந்தமான விஷயங்களை, ஞாபகமாக சொல்லும் மனிதர்கள், நிச்சயம் அனைவரையும் ஆச்சர்யப்பட வைக்ககின்றனர் என்ற உண்மையை எல்லோரும் ஏற்று கொள்ள தயங்குவதில்லை. ஆனால் இப்போது வரலாறு சம்மந்தமான விஷயங்கள் அவ்வளவாக யாருக்கும்
தெரிந்திருப்பதும் இல்லை. இப்படி புதைந்து கிடக்கும் வரலாறு சம்மந்தமான தகவல்களை மனிதர்களுக்கு மீட்டெத்து கொடுக்கிறது திஸ் டே இன் ஹிஸ்டரி என்ற விண்டோஸ் அப்ளிக்கேஷன். இந்த அப்ளிக்கேஷனில் ஒரு தேதியை கொடுத்தால் போதும், அந்த தேதியில் என்னென்ன நிகழ்வுகள் நடந்திருக்கிறது என்பதை எளிதாக தெரிந்து கொள்ள முடியும். இதற்கு புத்தகங்களில் நேரம் செலவு செய்து தேட வேண்டியதில்லை. இதில் குறிப்பிடப்பட்டடிருக்கும் நிகழ்வுகளை பற்றி அதிக விவரத்தினை தேட வேண்டும் என்றால், அதில் இருக்கும் லிங்க்கை பயன்படுத்தி, விக்கிப்பீடியா போன்ற வலைத்தளங்களில் பெறலாம். திஸ் டே இன் ஹிஸ்டரி அப்ளிக்கேஷனை ப்ரீயாக டவுன்லோட் செய்வதன் மூலம், மாணவர்கள் வரலாறு பற்றிய விவரங்கள் தெரிந்த ஒரு மனிதராக வரவும் முடியும்.


ட்ரேன்ஸிலேட் மீ:

‘வேற்று மொழிக்காரர்கள்’ என்ற பிரச்சனை இல்லாத இடமே கிடையாது என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் இது பிரச்சனையே அல்ல என்கிறது தொழில் நுட்பம். ஒரு மொழி தெரியவில்லை என்றாலும், அதில் இருக்கும் அர்த்தத்தினை புரிந்து கொள்ள பல வசதிகள் வந்துவிட்டது. அப்படி ஒரு சிறந்த வசதி தான், ட்ரேன்ஸிலேட் மீ என்ற விண்டோஸ் அப்ளிக்கேஷன். இந்த அப்ளிக்கேஷன் மூலம் 30 மொழிகளை எளிதாக மொழிபெயர்க்கலாம். இந்த அப்ளிக்கேஷன் மைக்ரோசாஃப்ட் பிங் ட்ரேன்ஸிலேட் சர்வீஸ் துணை பெற்றது. ட்ரேன்ஸிலேட் மீ என்ற இந்த அப்ளிக்கேஷன் பல மொழிகளை பற்றி அலசி, ஆராயவும் மாணவர்களுக்கு பெரிதும் பயன்படும்.


கிராஃப் டச்:

கணக்கு, இயற்பியல் போன்ற பாடங்களில் அதிகம் கிராஃப்கள் இடம் பெறுகிறது. கிராஃப் டச் என்ற விண்டோஸ் அப்ளிக்கேஷன் வரைபடங்கள் (கிராஃப்) சம்மந்தமாக பல விவரங்களை வழங்கும். இதில் கிராஃப்களை சிறியதாகவும், பெரியதாகவும் செய்து தெளிவாக பார்க்க முடியும். கேல்குலேட்டர், கிராஃப் ப்லாட்டர், நியூமரிக் சால்வர் என்று பல
தகவல்களை இதில் தெரிந்து கொள்ளவும், பயன்படுத்தி பார்க்கவும் முடியும். மாணவர்கள் எதெல்லாம் கடினம் என்று கருதுகின்றார்களோ அதை எல்லாம் எளிமையாக்கி காட்டுகிறது, இங்கே பட்டியலிடப்பட்டிருக்கும் சில விண்டோஸ் அப்ளிக்கேஷன்கள். இந்த கிராஃப் டச் என்ற அருமையான அப்ளிக்கேஷனை இலவசமாக டவுன்லோட் செய்யலாம்.


நியூரான் எக்சஸைசர்:

மாணவர்களது கவனத்தை அதிகப்படுத்த உதவ வருகிறது நியூரான் எக்சஸைசர் அப்ளிக்கேஷன். இதில் கொடுக்கப்பட்டிருக்கும் குட்டி குட்டி கணக்கு விளையாட்டுகள் மாணவர்களின் மூளையில் ஞாபக சக்தியினை அதிகரிக்கும். அதோடு கவனத்தையும், கற்பனை திறனையும் அதிகப்படுத்தும். இந்த அப்ளிக்கேஷன் அனைத்து வயதினருக்கும் பொருந்தும். இன்று வேலை பார்க்கும் இடங்களில் பல பிரச்சனைகள் உருவெடுத்து கொண்டு தான் இருக்கிறது. அதிலிருந்து உங்கள் கவனத்தை வேறு பக்கம் திசை திருப்ப இந்த நியூரான் எக்சஸைசர் அப்ளிக்கேஷன் உதவும். கவனத்தை திசை திருப்புவதோடு, உங்களை சரியான பாதையிலும் வழி நடத்தி செல்லும். இந்த அப்ளிக்கேஷன் கவனச் சிதறல்களை தவிர்க்கும். இது மாணவர்களுக்கு மிக அவசியம் தானே. இந்த விண்டோஸ் அப்ளிக்கேஷனை எளிதாகவும், ஃப்ரீயாகவும் டவுன்லோட் செய்ய முடியும்.


கான் அகாடமி:

கான் அகாடமி என்பது ஒரு லாப நோக்கற்ற நிறுவனம் என்று கூறலாம். கல்வி சம்மந்தமான பல தகவ்லகளை பற்றி இதில் சிறப்பாக தெரிந்து கொள்ள முடியும். இந்த அப்ளிக்கேஷனில் பல வீடியோக்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் கல்வி பற்றிய லேட்டஸ்டு அப்டேஷன்களை அவ்வப்போது பார்த்து புரிந்து கொள்ள முடியும்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget