இனி ஐபோனில் தமிழில் SMS அனுப்பலாம்


தமிழின் புகழ் உலகெல்லாம் பரவி இருக்கிறது என்பதெற்கு சான்றுகள் வேண்டுமா? இதோ சர்வதேச சந்தையில் அனைவரையும் பெரிய அளவில் கலக்கிய ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனில் தமிழில் எஸ்எம்எஸ் வசதியினை பெற முடியும். சர்வதேச எலக்ட்ரானிக் நிறுவனமான ஆப்பிளின் தொழில் நுட்ப சாதனங்களில், தமிழ் மொழியில் எஸ்எம்எஸ் அனுப்பும் வசதி இருக்கிறதென்றால், தமிழ் விரும்பிகள் உலகெல்லாம் பரவியிருப்பதாக தான் அர்த்தம். இதனால் இப்போது ஐபோனில் எப்படி தமிழில் எஸ்எம்எஸ்
அனுப்புவது என்று பார்க்கலாம்.

ஐடியூன்ஸில் உள்ள செல்லினம் என்ற அப்ளிக்கேஷனை டவுன்லோட் செய்து வைத்து கொள்ள வேண்டும். இதன் மூலம் எளிதாக தமிழ் கீபோர்டுகளை ஐபோனில் பெறலாம். இந்த தமிழ் கீபோர்ட் வசதி நிறைய ஸ்மார்ட்போன்களிலேயே பெற முடிகிறதே என்று யோசிக்கலாம்.
ஆனால் இந்த செல்லினம் அப்ளிக்கேஷன் மூலம் தமிழில் எஸ்எம்எஸ் அனுப்புவது மட்டும் அல்லாமல், தமிழில் இ-மெயிலும் அனுப்பவும் முடியும். சில தமிழ் எழுத்துக்களை பெற வேண்டும் என்றால், இதில் ஷிஃப்டு பட்டனை பயன்படுத்தி கொள்ள வேண்டும். செல்லினம் என்ற அப்ளிக்கேஷனை ஃப்ரீயாக டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
செல்லினம் அப்ளிக்கேஷன் மட்டும் அல்லாமல், தமிழ் எஸ்எம்எஸ் என்ற அப்ளிக்கேஷனும் சிறந்தது. ஆனால் தமிழ் எஸ்எம்எஸ் அப்ளிக்கேஷனை ரூ. 55க்கு எளிதாக ஆப்பிள் ஸ்டோரில் டவுன்லோட் செய்யலாம்.

இந்த 2 அப்ளிக்கேஷன்களையுமே ஆப்பிள் ஸ்டோரில் எளிதாக டவுன்லோட் செய்யலாம். மேலும் இந்த அப்ளிக்கேஷன்கள் சிறப்பாக தமிழில் உரையாடவம், தகவல்களை அனுப்பவும் உதவும்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget