25 மார்., 2011


நீங்கள் எதிர்பார்க்கும் வண்ணம் உங்கள் வீட்டில் உள்ள தரை பளிச்சிட வேண்டுமா? நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது மட்டும்தான்.
கீறல்கள் மறைய
தளத்தில் உள்ள கீறல்கள் மறைய ஒரு தேக்கரண்டி பேக்கிங் பவுடர் கலந்த நீரை ஒரு வாளி நிறைய எடுத்துக் கொள்ளுங்கள். அதில் வெள்ளைத்துணியை நனைத்து எடுத்து பிழிந்து கீறல்கள் விழுந்த இடத்தை அழுத்தித் தேய்த்து விடுங்கள். காய்ந்த பிறகு பாருங்கள். கீறல் விழுந்த தடமே இல்லாமல் போய்விடும்.
வினைல் தளம்
வினைல் தளமாக இருந்தால், பேக்கிங் பவுடரை சிறிதளவு எடுத்து தளத்தில் தூவி விடுங்கள். பிறகு, கறைபடிந்த தரையை, வினிகரில்

உடலுக்கு அழகு சேர்க்கும் இயற்கை பொருட்கள்:
ரோஜா இதழ், எலுமிச்சை தோல், கடலைப் பருப்பு, மஞ்சள் ஆகியவற்றை ஒரு வாரம் வெயிலில் காய வைத்து பத்திரப்படுத்துங்கள். வெயிலில் அலைந்து திரியும்போது, உடலில் உள்ள வியர்வை துவாரங்கள் பெரிதாகி, தூசி அடைத்துக் கொள்ளும். மேலே சொன்னவற்றை மாவு மிஷின் கடையில் கொடுத்து அரைத்து வைத்து, தினமும் காலை குளிக்கும்போது உடலுக்குத் தேய்த்துக் குளிக்கலாம். கடைகளில் விற்கும் “காஸ்ட்லி ஸ்கிரப்பர்”களை விட இவை உடலுக்கு மிக மிக நல்லது.
வைட்டமின் “டி” குறைபாட்டை சரிகட்டுங்களேன்!
காலை நேரங்களில் சுளீர் வெயில் தலைதூக்கத் துவங்கி விட்டது.

உலக அதிசயங்களுள் ஒன்று இத்தாலியின் பைசா நகரத்து சாய்ந்த கோபுரம். சுமார் 14500 மெட்ரிக் டன் எடையும் 183 அடி உயரமும் கொண்ட இந்த கோபுரத்தின் வயது 838 ஆண்டுகள். ஆண்டுதோறும் உலகெங்கிலுமிருந்து 10 லட்சம் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வரும் இந்த கோபுரம் தன்னிலையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக சாய்ந்து வருகிறது என்பது தான் பல நூற்றாண்டுகளாக உலக மக்களை கவலை அடைய செய்வதாக உள்ளது. ஏழு அடுக்குகளைக்கொண்ட இந்த கோபுரம், வெறும் 10 அடி அஸ்திவாரத்தில் மட்டுமே அமைந்துள்ளது மட்டுமல்லாமல், இவ்வளவு எடையை தாங்கும் அளவிற்கு அந்த இடத்தின் மண் வலுவானதல்ல என்பதும் தான் இந்த கோபுரம் சாய்வதற்கான காரணங்களென்று கூறப்படுகிறது. மேலும் மத்திய தரை கடலிலிருந்து வரும் உப்புக்காற்றும் மழைகாலங்களில் ஏற்படும் மண்

இந்தியாவில் மிகச்சாதாரணமாக ஏற்படும் தொற்றாக, டைபாய்டு உள்ளது. மூன்று அல்லது அதற்கு மேலான நாட்களில் காய்ச்சல் தொடர்ந்தால், அது டைபாய்டாக இருக்கும் என முடிவு செய்யப்படுகிறது. “சல்மோநெலா’ என்ற வகை பாக்டீரியாவால் இந்நோய் ஏற்படுகிறது. கழிவுநீர் மூலமும், இந்நோய் தாக்கியுள்ள ஒருவர் அளிக்கும் உணவை சாப்பிடுவதன் மூலமும் இந்நோய் ஏற்படுகிறது.நம்மூர் அனைத்திலும் கழிவுநீர் மற்றும் கழிவுப் பொருட்களை அகற்ற சிறந்த முறை பின்பற்றப்படுவதில்லை. இதுபோன்ற சூழ்நிலையில் டைபாய்டு தொற்று ஏற்படுவது இயற்கையே. அதிர்ஷ்டவசமாக, டைபாய்டை தவிர்க்க தடுப்பு மருந்துகள் உள்ளன. 2 வயது நிறைந்தவுடன், ஒரு ஊசி போடலாம்.
பின், ஒவ்வொரு 3 வயது கூடும்போதும், நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் மருந்து உட்கொள்ள வேண்டும். வாய் வழியே சாப்பிடும்,

இணையத்தில் நுழைந்து நம் விருப்பமான வெப்சைட்டிற்குள் நுழைய, நம் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டினைத் தருவோம். வழக்கமாக, உடனே இணைய தளம் திறக்கப்படும். நாம் நமக்குத் தேவையான தகவல்களைப் பெற முயற்சிப்போம். ஆனால், சில வேளைகளில் “Your Password or Username is Invalid. Please Try Again.” என்ற செய்தி வந்து நம் ஆசைத்தீயில் தண்ணீரை ஊற்றிவிடும். “அய்யோ! சரியாகத்தானே யூசர் நேம் மற்றும் பாஸ் வேர்டையும் அடித்தோம் என்ன வாயிற்று?’ என்ற பதற்றம் பற்றிக் கொள்ளும். அந்த பதற்றத்திலேயே இன்னும் பல தவறுகளைச் செய்திடத் தொடங்குவோம். இன்டர்நெட் இணைப்பிற்காவது பரவாயில்லை; ட்ரெயின் டிக்கெட், பேங்க் அக்கவுண்ட் கையாளுதல், ஆன்லைனில் பொருட்கள் வாங்குதல் போன்றவற்றில் ஈடுபடுகையில் இந்த பிரச்னை வந்தால் நம் ரத்த அழுத்தம் இன்னும் எகிறும், இல்லையா? இந்த சூழ்நிலைக்கு நாம் தான் காரணம். எனவே இது போல லாக் இன் செய்திடுகையில் செய்யக் கூடாதவற்றையும் செய்ய வேண்டியவற்றையும் இங்கு காணலாம்.
செய்யக் கூடாதவை:
1. லாக் இன் செய்திடுகையில் “ஓகே’ அல்லது “சப்மிட்’ பட்டனை ஒரு முறை மட்டுமே தட்டவும்.
2.தட்டிய பின் மேற்கொண்டு எதுவும் செய்திடாமல் இருக்கவும். வேறு புரோகிராம்களுக்கான எந்தவிதமான செயல்பாடும்களையும் மேற்கொள்ளாமல் இருப்பது நல்லது.
3.மவுஸைத் தட்டாமல் அல்லது அதைக் கொண்டு வேறு எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. சிஸ்டம் உங்களை லாக் இன் செய்திடும் வரை பொறுமை காப்பது நல்லது. ஏதாவது செய்தால் நீங்கள் இன்டர்நெட்டிலிருந்து வெளியே தள்ளப்படலாம்.
4. வேறு ஸ்கிரீன், வேறு புரோகிராம், வேறு மெனு என்று எதற்கும் செல்ல வேண்டாம்.
5. ஏற்கனவே இருக்கும் புரோகிராம் மட்டுமின்றி புதிய புரோகிராம் எதனையும் திறக்கும் முயற்சியிலும் ஈடுபட வேண்டாம்.
6. உங்கள் பாஸ்வேர்ட் அல்லது யூசர் நேம் எதனையும் காப்பி செய்து பேஸ்ட் செய்திடும் செயலை அறவே நிறுத்துங்கள். எத்தனை முறை அவற்றை டைப் செய்திட வேண்டியது இருந்தாலும் டைப் மட்டுமே செய்திடவும்.

பழைய பதிவுகளை தேட

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget