நடிகை சுவேதா மேனனின் பிரசவ காட்சி படப்பிடிப்பு

பிரபல மலையாள நடிகை சுவேதா மேனனின் உண்மையான பிரசவ காட்சியை, களிமண்ணு என்ற திரைப்படத்திற்காக படம் பிடிக்கப்பட்டுள்ளது. நடிகை சுவேதா மேனன். இவர் தமிழில் 'நான் அவன் இல்லை 2, ‘சாது மிரண்டால், ‘அரவான்' ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்தியிலும் நடித்து வந்த சுவேதாவுக்கும், மும்பையில் பத்திரிக்கை ஆசிரியராக உள்ள ஸ்ரீவல்சன் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. நிறைமாத கர்ப்பிணியான அவர், மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.